Sanju Samson: தோல்வியால் துவண்ட ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மற்றொரு அடி! குஜராத் போட்டியால் நேர்ந்த சிக்கல்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதமாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் நடத்தை விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
ஐபிஎல் 2024 தொடரின் 24வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 196 ரன்கள் குவித்தது.
இதையடுத்து சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரியுடன் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், முதல் தோல்வியை தழுவியது.
இதையடுத்து இந்த போட்டிக்கு பின் மற்றொரு இடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் பந்து வீசாத காரணத்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.