Team India Coach: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவி! சச்சின் டென்டுல்கர், மோடி பெயர்களில் வந்த விண்ணப்பங்கள்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Team India Coach: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவி! சச்சின் டென்டுல்கர், மோடி பெயர்களில் வந்த விண்ணப்பங்கள்

Team India Coach: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவி! சச்சின் டென்டுல்கர், மோடி பெயர்களில் வந்த விண்ணப்பங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 28, 2024 04:52 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதில் வேடிக்கையான விஷயமாக சச்சின் டென்டுல்கர், நரேந்திர மோடி ஆகியோரின் பெயர்களில் போலி அடையாளங்களுடன் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சச்சின் டென்டுல்கர், மோடி பெயர்களில் வந்த விண்ணப்பங்கள்
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சச்சின் டென்டுல்கர், மோடி பெயர்களில் வந்த விண்ணப்பங்கள் (PTI)

இதில் பல்வேறு விண்ணப்பங்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் போன்ற போலி பெயர்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. 

ராகுல் டிராவிட் பயிற்சி காலம் நிறைவு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம், அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு பெறுகிறது. இதன் பிறகு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் செயல்படுவார்.

இதற்கிடையே இந்திய அணிக்கு பயிற்சியாளராக விருப்பம் உள்ளவர்கள் தங்களது எதிர்கால திட்டம், தேவைகள், லட்சியகள் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்குமாறு மே 13ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது.

கூகுள் பார்ம்ஸ் மூலம் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலானவை தீவிரமற்றவையாகவும், கருத்தில் கொள்ள தகுதியற்றவையாகவும் இருந்து வருகிறது. 

இது முதல் முறை இல்லை

இதுபோன்ற சூழ்நிலையை பிசிசிஐ எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல எனவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரவிசாஸ்த்ரியின் பதவிக்காலம் காலவதியான போது, அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டை நடைபெற்றது.  அப்போது இதுபோன்று பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக தெரிவித்த நிலையில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. இதில் பெரும்பாலானவை போலி அடையாளங்களை கொண்டதாகவே இருந்தன.

அப்போது இந்தியா ஏ மற்றும் இந்தியா யு19 அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட் பல்வேறு வெற்றிகளை குவித்திருந்தார். இந்தியாவுக்கு யு19 உலகக் கோப்பையும் பெற்று தந்தார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் இருந்தார். 

அவர் இடத்தை நிரப்புவதற்கு விவிஎஸ் லக்‌ஷமன் தயாராக இருந்ததால், டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றது எளிதாக நடந்தது. 

கூகுள் மூலமாக பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்பதற்கு முக்கிய காரணமாக, விண்ணப்பதாரர்களின் பெயர்களை ஒரே தாளில் ஆராய்ந்து விடலாம் என்பதால் தான்.

இந்த முறை பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிகாட்டியாக செயல்பட்டு அந்த அணி மூன்றாவது ஐபிஎல் கோப்பையை பெற முக்கிய காரணமாக இருந்த கெளதம் கம்பீரை நியமிப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் கடமைகள் காரணமாக விவிஎஸ் லக்‌ஷமன் ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில் சிஎஸ்கே பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங், இந்திய பயிற்சியாளர் வேலையின் தன்மை காரணமாக, இதே காரணத்தை முன்னிறுத்தி ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜஸ்டின் லேங்கர் ஆகியோர் விலகியுள்ளனர். 

ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் இந்திய அணிக்கு யார் பயிற்சியாளராக இருப்பார் என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.