SA vs NZ Preview: ஹாட்ரிக் ஆபத்தில் இருக்கும் நியூசிலாந்து! தென் ஆப்பிரக்காவுக்கு எதிராக ட்ரிபிள் தாக்குதல் ப்ளான்
World Cup 2023, NZ vs SA Preview: சமபலம் பொருந்திய தென் ஆப்பரிக்கா, நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன. இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க போராடும் போட்டியாக இது அமைந்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 32வது போட்டி தென் ஆப்பரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று புனேவில் வைத்து நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக மகாராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு போட்டியானது தொடங்குகிறது.
புள்ளிப்பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் தென் ஆப்பரிக்கா, நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை செய்யவுள்ளன. உலகக் கோப்பை 2023 தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகளாக இந்த இரு அணிகளும் உள்ளன.
தென் ஆப்பரிக்கா விளையாடிய 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்றுள்ளது. வளர்ந்து வரும் அணியான நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. தொடர்ச்சியாக முதல் பேட்டிங்கில் வெற்றி பெற்று வந்த தென் ஆப்பரிக்கா, தனது கடைசி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சேஸிங் செய்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் எந்த குறையும் இல்லாத அணியாக தென் ஆப்பரிக்கா செயல்பட்டு வருகிறது.
அணியின் முக்கிய மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் இன்னும் பெரிய இன்னிங்ஸ் விளையாடாமலே இருந்து வருகிறார். அதேபோல் அணியின் கேப்டன் பவுமாவும் 100 ரன்களை கூட கடக்காமல் உள்ளார். எனவே இவர்கள் இருவரும் தங்களது பார்மை மீட்பதற்கு முழு திறமையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை முதல் நான்கு போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா என வலுவான அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது. தென் ஆப்பரிக்கா போல் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்தும் சிறப்பாக செயல்படும் அணியாகவே இருந்து வருகிறது.
எனவே சமபலம் பொருந்திய இரண்டு அணிகள் மோதும் போட்டியாக இன்றைய ஆட்டம் அமைகிறது. இன்று தென் ஆப்பரிக்கா வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும். எனவே அதற்கான முயற்சியில் அந்த அணி ஈடுபடும் என நம்பலாம்.
கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கும் நியூசிலாந்து ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க போராடும் என எதிர்பார்க்கலாம். நியூசிலாந்து அணியில் சாண்ட்னர், தென் ஆப்பரிக்கா அணியில் கேசவ் மகாராஜ் என இருவரும் இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.
நியூசிலாந்து அணியில் கூடுதலாக ரச்சின் ரவீந்திரா, கிளென் பிளிப்ஸ் என கூடுதல் ஸ்பின்னர்களை வைத்து ட்ரிபிள் தாக்குதலைகள் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் நிலவரம்
புனேவில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், பிட்ச் பேட்டிங்குக்கு நன்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. இரவு நேரத்தில் பனிப்பொலிவால் எந்த தாக்கமும் ஏற்படாது என்பதால் பவுலர்களும் சாதிக்கலாம். ஈரப்பதம் அதிகமாக காணப்படும் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பரிக்கா - நியூசிலாந்து அணிகள் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 6, தென் ஆப்பரிக்கா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த கால போட்டிகளில் அடிப்படையில் நியூசிலாந்து முன்னணி வகித்தாலும், பழிதீர்க்க தென் ஆப்பரிக்கா முயற்சிக்கும் என நம்பலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்