தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Sa Vs Ned Result: Just Miss..! குறைவான ஸ்கோர், நெதர்லாந்தின் தரமான பவுலிங் - தட்டு தடுமாறி கரை சேர்த்த மில்லர்

SA vs NED Result: Just Miss..! குறைவான ஸ்கோர், நெதர்லாந்தின் தரமான பவுலிங் - தட்டு தடுமாறி கரை சேர்த்த மில்லர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 08, 2024 11:51 PM IST

நெதர்லாந்தின் தரமான பவுலிங்கை எதிர்கொண்டு நிதானம், அதிரடி என கலந்து கட்டி விளையாடி தட்டு தட்டு தடுமாறி கரை சேர்த்தார் டேவிட் மில்லர். அவருக்கு பக்கபலமாக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் துணை நின்று பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

நெதர்லாந்தின் தரமான பவுலிங்கை எதிர்கொண்டு தட்டு தடுமாறி கரை சேர்த்தார் மில்லர்
நெதர்லாந்தின் தரமான பவுலிங்கை எதிர்கொண்டு தட்டு தடுமாறி கரை சேர்த்தார் மில்லர் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

பேட்டிங்கில் தடுமாறிய நெதர்லாந்து

இந்த உலகக் கோப்பை தொடரில் நியூயார்க் கிரிக்கெட் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்ககூடியதாகவே இருந்து வருகிறது. இதையடுத்து இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 40, லோகன் வான் பீக் 23 ரன்கள் எடுத்தனர். தென்ஆப்பரிக்கா பவுலர்கள் துல்லிய பவுலிங்கால் ரன் அடிக்க முடியாமல் நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள்.

தென் ஆப்பரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான ஒட்னீல் பார்ட்மேன் வெறும் 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்கோ ஜான்சன், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தென் ஆப்பரிக்கா சேஸிங்

மிகவும் குறைவான ஸ்கோராக இருந்தபோதிலும் மோசமான தொடக்கத்தால் தென் ஆப்பரிக்கா தடுமாறியது. பின்னர் டேவிட் மில்லரின் நங்கூர இன்னிங்ஸ் மூலம் வெற்றியை பெற்றது.

18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. 7 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய தென் ஆப்பரிக்கா, குரூப் டி பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

நெதர்லாந்து பவுலர்களில் விவியன் கிங்மா, லோகன் வான் பீக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மோசமான தொடக்கம்

நெதர்லாந்து அணி தரமான பவுலிங்கால் தென் ஆப்பரிக்காவின் டாப் ஆர்டரை காலி செய்தது. 5 ஓவர் முடிவதற்குள்ளாகவே டாப் 4 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி வெற்றி பெறுமா என்ற கேள்விக்குறி உருவானது.

மில்லர் - ஸ்டப்ஸ் பார்ட்னர்ஷிப்

தென் ஆப்பரிக்கா இக்கட்டான நிலையில் இருந்தபோது ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் - டேவிட் மில்லர் ஆகியோர் இணைந்து அணியை மீட்கும் விதமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர். ஸ்டப்ஸ் 37 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்ந்து நிதானமும், அதிரடியும் கலந்து பேட் செய்து வந்த மில்லர் 51 பந்துகளில் 59 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவர் தனது இன்னிங்ஸில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024