தமிழ் செய்திகள்  /  Cricket  /  Royal Challengers Bangalore Women Won By 8 Wkts Wpl 2024

WPL 2024: தட்டி தூக்கிய ஸ்மிருதி மந்தனா படை- தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றி

Manigandan K T HT Tamil
Feb 28, 2024 09:43 AM IST

ரேணுகா சிங்கின் அபார பந்துவீச்சு மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் அற்புதமான பேட்டிங் ஆகிய இரண்டும், ஆர்சிபி எட்டு விக்கெட்டுகள் மற்றும் 45 பந்துகள் மீதமுள்ள நிலையில் குஜராத்தை வீழ்த்த உதவியது.

ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்தை விளாசிய காட்சி
ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்தை விளாசிய காட்சி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

கேப்டன் ஸ்மிருதி மந்தனா 8 பவுண்டரிகளையும் 1 சிக்ஸரையும் விளாசி அசத்தினார். ஆஃப்-சைடில் சிறந்தா ஸ்ட்ரோக் மேக்கரான, மந்தனா, தவறாமல் மிட்-ஆஃப் மற்றும் பேக்வர்ட் பாயிண்டுக்கு இடையிலான பகுதியை துவம்சம் செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த குஜராத், 107/7 என்று ஸ்கோருக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஆர்சிபி சேஸிங்கை ஆரம்பத்திலேயே முடித்து தங்கள் நிகர ரன் விகிதத்தை உயர்த்த தெளிவான நோக்கத்துடன் களமிறங்கினர். மந்தனா முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகளை அடித்தார், மூன்றாவது ஓவரில் ஆர்சிபி சோஃபி டிவைனை இழந்தாலும், மந்தனா மற்றும் சபினேனி மேகனா ஸ்கோர்போர்டை கவனித்துக் கொண்டனர்.

கடந்த வாரம் யுபி வாரியர்ஸுக்கு எதிராக 53 ரன்கள் எடுத்த ஆர்சிபி வீராங்கனை மேக்னா, 11 வது ஓவரில் கன்வர் வீசிய பந்தில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ஆர்சிபியை இலக்கை தொடும் தூரத்திற்குள் கொண்டு வந்தார்.

முன்னதாக, டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபியின் முடிவு தெளிவாக இருந்ததை ஆட்டத்தில் காண முடிந்தது. குஜராத் கேப்டன் பெத் மூனி பேட்டிங் ஆர்டரை மாற்றியமைத்தார், ஆனால் 3 வீராங்கனைகள் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

குஜராத்தின் இன்னிங்ஸ் அதன் முழுமைக்கும் வேகத்தை இழந்தது.

ரேணுகா சிங் தனது இரண்டாவது ஓவரில் பெத் மூனியை வெளியேற்றினார். ஆர்சிபி வீராங்கனை மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.

இந்த வெற்றி மூலம், இதன் மூலம் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேன் ஆஃப் தி மேட்ச் விருதுக்கு ஆர்சிபி பவுலர் ரேணுகா தாக்குர் சிங் தேர்வு செய்யப்பட்டார். இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ்-யு.பி.வாரியர்ஸ் மோதும் 6வது லீக் ஆட்டம் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை ஜியோ சினிமாவில் கண்டு ரசிக்கலாம்.

IPL_Entry_Point