Rohit sharma Records: 73 ஆண்டு கால சாதனை முறியடிப்பு! ஒரே சதத்தில் கங்குலி, தோனியை முந்திய ரோகித் ஷர்மா
- Rohit sharma Records: இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 11வது சதமடித்திருக்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, செளரவ் கங்குலி சாதனையை முறியடித்துள்ளார்
- Rohit sharma Records: இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 11வது சதமடித்திருக்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, செளரவ் கங்குலி சாதனையை முறியடித்துள்ளார்
(1 / 7)
ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மா 196 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் தனது இன்னிங்ஸில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அடித்தார்
(2 / 7)
இந்திய அணிக்காக அதிக சர்வேதச ரன்கள் அடித்த வீரர்களின் லிஸ்டில் ரோகித் ஷர்மா ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நான்காவது இடத்தில் இருந்த செளரவ் கங்குலி அடித்த 18, 575 ரன்கள் முந்தி ரோகித் ஷர்மா 18,577 ரன்கள் எடுத்துள்ளார். இந்த லிஸ்டில் முதலிடத்தில் சச்சின் டென்டுல்கர் 34,357 ரன்களும், விராட் கோலி 26, 733 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ராகுல் டிராவிட் 24, 208 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்கள்
(3 / 7)
அதிக வயதில் சதமடித்த இந்திய கேப்டன் என்ற தனித்துவமான சாதனை புரிந்துள்ளார் ரோகித் ஷர்மா. இவர் 36 வயது 291 நாள்களில் சதமடித்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய வீரரான விஜய் ஹசாரே 1951ஆம் ஆண்டில், 36 வயது 278 நாள்கள் இருந்தபோது சதமடித்தார். 73 ஆண்டுகளுக்கு பிறகு இதை முறியடித்துள்ளார் ரோகித் ஷர்மா. இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிராக 1000 டெஸ்ட் ரன்களை அடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 23 இன்னிங்ஸில் இதை செய்துள்ள ரோகித் ஷர்மா 3 சதம், 4 அரைசதமடித்துள்ளார்
(4 / 7)
2019 முதல் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை அதிகசதமடித்த ஓபனராக இருந்து வருகிறார் ரோகித் ஷர்மா. இதுவரை 50 இன்னிங்ஸில் 8 சதம், 6 அரைசதமடித்துள்ளார்
(5 / 7)
இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரோகித் ஷர்மா அடித்த சதம், சர்வதேச போட்டியில் ஓபனராக அவர் அடிக்கும் 42வது சதமாகும். இதன் மூலம் கிறஸ் கெய்ல் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இந்த லிஸ்டில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 49 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் டென்டுல்கர் 45 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்
(6 / 7)
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய பேட்ஸ்மேன்களில் தோனியின் சாதனையை ரோகித் ஷர்மா முறியடித்துள்ளார். இந்த லிஸ்டில் 91 சிக்ஸர்களுடன் வீரேந்தர் சேவாக் முதலிடத்தில் உள்ளார். தோனி 78 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ரோகித் ஷர்மா 80 சிக்ஸர்களுடன் தற்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்(AFP)
மற்ற கேலரிக்கள்