தமிழ் செய்திகள்  /  Cricket  /  Rizwan Runs Without Bat, Touches Down With Gloves But Can't Believe The Outcome

Mohammad Rizwan: முகமது ரிஸ்வான் செய்த செயல்..! அம்பயர் முடிவால் தலையில் கை வைத்து அதிர்ச்சி - விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 17, 2024 04:55 PM IST

Mohammad Rizwan was part of some amusing running between the wicket during the 3rd T20I between New Zealand and Pakistan at Dunedin.

கிரீஸை டச் செய்யாமல் ஓடிய முகமது ரிஸ்வான்
கிரீஸை டச் செய்யாமல் ஓடிய முகமது ரிஸ்வான் (Screengrab)

ட்ரெண்டிங் செய்திகள்

பாகிஸ்தான் இன்னிங்ஸின் போது ஒபனிங் பேட்ஸ்மேன் சயிம் அயூப் 10 ரன்களில் நடையை கட்டினார். அப்போது அணியின் ஸ்கோர் 5.4 ஓவரில் 49 என இருந்தபோது பேட் செய்ய வந்தார் முகமது ரிஸ்வான். பேட்டிங்கில் ரன்குவிப்பில் ஈடுபட்டிருந்த ரிஸ்வான் பேக்ஃபூட்டில் ஷாட் ஒன்றை ஆடியபோது சமநிலை தவறி கீழே விழுந்து விட முற்பட்டபோதிலும், சமாளித்த அவர் பேட்டை தவறவிட்டார். ரிஸ்வான் அடித்த பந்து டீப் மிட் விக்கெட், லாங் ஆன் இடையே செல்ல இரண்டு ரன்கள் ஓடும் வாய்ப்பு கிடைத்தது.

கையில் பேட் இல்லாமல் ஓடிய ரிஸ்வான், நான் ஸ்டிரைக்கர் என்டில் குணிந்து தனது கைகளை கிரீஸில் வைத்து சென்றார். பேட் இல்லாத முகமது ரிஸ்வானை அவுட்டாக்க குறிவைத்து நியூசிலாந்து பீல்டர் பந்தை த்ரோ செய்தபோதிலும், டைவ் அடித்து எப்படியோ தப்பித்தார்.

வழக்கமாக ரன் ஓடும்போது பேட்ஸ்மேன்கள் பேட்டை கீழே தவறவிடுவது சில சமயங்களில் இயல்பாகவே ஏற்படும். இந்த சூழலில் கிரீஸை எட்டுவதற்கு எளிய வழியாக பேட்ஸ்மேன்கள் கால்களை பொதுவாக பயன்படுத்துவதுண்டு.

ஆனால் இந்த வழக்கத்திலிருந்து வித்தியாசமாக ரன் ஓடிவந்து குணிந்து தனது கைகளை கீரிஸில் அவர் வைத்து பின்பு ரிட்டர்ன் ஓடியது வியப்பில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருந்தது. அத்துடன், இப்படி செய்தும் அவர் கிரீஸிலிருந்து சில குறுகிய சென்டிமீட்டர் தொலைவில் தான் கைகளை வைத்து விட்டு சென்றுள்ளார்.

இதை சரியான கவனித்த அம்பயர் ஷார்ட் ரன் என கூறி ஒரு ரன்னை வழங்கவில்லை. அம்பயரின் முடிவால் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் லுக்கை வெளியிட்டார் ரிஸ்வான்.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

எப்போதும் களத்தில் ரன்குவிப்பது தவிர இதுபோல் ஏதாவதொரு விஷயத்தை செய்து கவனத்தை ஈர்ப்பார் முகமது ரிஸ்வான். பல முறை காயமடைந்திப்பது போல் காட்டிக்கொண்டு பொய்யாக நேரத்தை வீணடித்துள்ளார். இதை அவர் ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து இந்த முறை, பேட் இல்லாமல் ரன் ஓடுகிறேன் பேர்வழி என்று முழுமையாக அதை செய்யாமல், ஓடிய ரன்களும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து, 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 3-0 என வென்றிருப்பதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் முகமது ரிஸ்வான் 24 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 37 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil