தமிழ் செய்திகள்  /  Cricket  /  Riyan Parag Fifty Helps Rr To Set 186 Runs Target Against Dc

RR vs DC Live Score: அரைசத்துடன் பராக் அதிரடி பினிஷ்!அஸ்வினின் 3 சிக்ஸர்கள் - டெல்லி பவுலர்களை போட்டு தாக்கிய ராஜஸ்தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 28, 2024 09:33 PM IST

பொறுப்புடன் பேட் செய்த ரியான் பராக் அரைசதம் அடித்ததோடு, கடைசி வரை நிலைத்து பேட் செய்து அணிக்கு தேவைப்படும் பினிஷ் கொடுத்தார். அவருடன் இணைந்து அஸ்வின் முக்கிய கட்டத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

பந்தை பவுண்டரிக்கு அடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் ரியான் பராக்
பந்தை பவுண்டரிக்கு அடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் ரியான் பராக் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இந்த சூழ்நிலையில் முதல் வெற்றிக்கான தேடலுடன் டெல்லி கேபிடல்ஸ் களமிறங்கியுள்ளது. இந்த போட்டி டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாடும் 100வது போட்டியாக உள்ளது.

டெல்லி பவுலிங் தேர்வு

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் இஷாந்த் ஷர்மா, ஷாய் ஹோப் ஆகியோருக்கு பதிலாக முகேஷ் குமார், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் போட்டியில் களமிறங்கிய அதே லெவனுடன் விளையாடுகிறது.

இதையடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரியான் பராக் 84, ரவிச்சந்திரன் அஸ்வின் 29 ரன்கள் எடுத்துள்ளனர்.

ரியான் பராக் அதிரடி

அணியின் டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில் நான்காவது பேட்ஸ்மேனாக பேட் செய்ய வந்த இளம் பேட்ஸ்மேன் ரியான் பராக் பொறுப்புடன் பேட் செய்தார். ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்வால் 5, ஜோஸ் பட்லர் 11 என அவுட்டாக. அதன் பின்னர் பேட் செய்ய வந்த சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில், சூழ்நிலையை ஏற்ப பேட் செய்த பராக், விக்கெட் சரிவை தடுத்ததுடன் தேவைப்படும் நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர்களை அடித்தார். இதனால் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக காட்டியதுடன் ஆட்டத்தை சூப்பராக பினிஷ் செய்தார்.

ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார். அவர் தனது இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை அடித்தார்.

மாஸ் காட்டிய அஸ்வின்

மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்ட அஸ்வின் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். மூன்று சிக்ஸர்களை அடித்து வாவேடிக்கை காட்டிய அவர் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். அத்துடன் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ரியான் பராக்குடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த அஸ்வின் 54 ரன்கள் சேர்த்தார்.

டெல்லி பவுலர்கள் அனைவருக்கும் விக்கெட்

இந்த போட்டியில் பவுலிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் பந்து வீச்சாளர்கள் அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.ஸ்பின்னர் அக்‌ஷர் படேல் மிகவும் சிக்கனமாக பந்து வீசி 4 ஓவரில் 21 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.

மற்ற பவுலர்கள் முகேஷ் குமார், அன்ரிச் நார்ட்ஜே, குல்தீவ் யாதவ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point