PBKS vs DC Preview: ரிஷப் பண்ட் ரிட்டர்ன்ஸ்..! பேட்டிங்,பவுலிங்கில் பக்காவாக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ்-rishabh pant return from injury and facing powerful batting bowling line up pbks - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pbks Vs Dc Preview: ரிஷப் பண்ட் ரிட்டர்ன்ஸ்..! பேட்டிங்,பவுலிங்கில் பக்காவாக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ்

PBKS vs DC Preview: ரிஷப் பண்ட் ரிட்டர்ன்ஸ்..! பேட்டிங்,பவுலிங்கில் பக்காவாக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 23, 2024 06:00 AM IST

விபத்தில் சிக்கி காயம் காரணமாக கடந்த சீசனை மிஸ் செய்த ரிஷப் பண்ட் முழு உடற்தகுதியுடன் உள்ளூர் போட்டிகள் எதுவும் விளையாடாத நிலையில் நேரடியாக ஐபிஎல் போட்டியில் ரிட்டர்ன் ஆகிறார்.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் (இடது), டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் (வலது)
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் (இடது), டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் (வலது)

ரிஷப் பண்ட் ரிட்டர்ன்

கடந்த 2022 டிசம்பரில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். அவரது வலது முழங்காலில் மூன்று தசைநார் புனரமைப்பு சிகிச்சை நடைபெற்றது.

ஊன்றுகோல் உதவியுடன் நடக்க தொடங்கி பண்ட், பின்னர் குணமாகி, தேசிய கிரிக்கெட் அகாடமியில் புத்துணர்வு முகாமில் பங்கேற்று தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கிரிக்கெட் ஆக்‌ஷனுக்கு திரும்பியுள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில பயிற்சி போட்டிகளில் விளையாடிய பண்ட், உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்காமல் நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருக்கிறார்.

டெல்லி கேபிடல்ஸ் பலம்

பண்ட் வருகை டெல்லி அணிக்கு புத்துயிர் தரும் விஷயமாக இருந்து வரும் நிலையில் அவர் அணியின் விக்கெட் கீப்பராகவும் , கேப்டனாகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி கேபிடல்ஸ் அதை நிவர்த்தி செய்யும் விதமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் பிராசர் என தென் ஆப்பரிக்கா டி20 வீரரகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை அணியில் எடுத்துள்ளது.

பவுலிங்கில் அக்‌ஷர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, கலீல் அகமது என வேகமும், ஸ்பின்னும் கலந்த கலவையுடன் உள்ளது.

கடந்த சீசனில் 14 போட்டிகளில் 5இல் மட்டும் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டயாத்தில் உள்ளது. அதே சமயம் தனது பேட்டிங்கால் ஆட்டத்தில் எந்த நேரத்திலும் திருப்புமுனை ஏற்படுத்தகூடிய பண்ட் பார்ம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. போதிய அனுபவம் இல்லாத வீரர்கள் அணிக்கான பலவீனமான விஷயமாக உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் பலம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார். கடைசியாக 2014 சீசனில் தான் இறுதிப்போட்டி வரை தகுதி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் ரன்னர் அப் ஆனது. கடந்த சீசனை மிஸ் செய்து, இந்த முறை அணிக்கு ஜானி பேர்ஸ்டோ திரும்பியிருப்பது பேட்டிங் வரிசையை வலுப்படுத்தியுள்ளது.

பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் ஷர்மா என அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் பவுலிங்கில் ராகுல் சஹார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், சாம் கரன் என டி20 கிரிக்கெட்டில் நன்றாக செயல்படக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்.

எனவே சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் கலவையை கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் உள்ளது.

பிட்ச் நிலவரம்

முல்லான்பூர் மைதானத்தில் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி உள்ளது. இங்கு முஸ்தாக் அலி கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்றுள்ளன. மற்ற மைதானங்களை காட்டிலும் சற்றே பெரிய பவுண்டரிகளை கொண்ட மைதானமாக உள்ளது. பிட்சில் நல்ல பவுன்ஸ் இருக்கும் எனவும், பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்களுக்கு விருந்தாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.