தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Dc Vs Gt Innings Break: நான்கு சிக்ஸர், ஒரு பவுண்டரி..! இது ரிஷப் பண்ட் பினிஷ் - 73 ரன்களை வாரி வழங்கிய மோகித் ஷர்மா

DC vs GT Innings Break: நான்கு சிக்ஸர், ஒரு பவுண்டரி..! இது ரிஷப் பண்ட் பினிஷ் - 73 ரன்களை வாரி வழங்கிய மோகித் ஷர்மா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 24, 2024 09:23 PM IST

மோகித் ஷர்மா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 31 ரன்களை அடித்து நொறுக்கினார் ரிஷப் பண்ட். அதிரடி பேட்டிங்கால் டெல்லி கேபிடல்ஸ் 224 ரன்கள் குவித்துள்ளது. மோகித் ஷர்மா தனது கேரியரில் மிகவும் மோசமான பந்து வீச்சாக விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

ஒற்றை கையில் சிக்ஸரை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்
ஒற்றை கையில் சிக்ஸரை பறக்கவிட்ட ரிஷப் பண்ட் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் டெல்லி அணியில் டேவிட் வார்னர், லலித் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ஷாய் ஹோப், சுமித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். குஜராத் அணி கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடுகிறது

குஜராத் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் அடித்துள்ளது.

பவுலிங் ஆல்ரவுண்ட்ர் அக்‌ஷர் படேல் மூன்றாவது பேட்ஸ்மேனாக புரொமோட் செய்யப்பட்ட நிலையில் அவர் அரைசதமடித்தார். டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 88, அக்‌ஷர் படேல் 66, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 26, ஜேக்-பிராசர் மெக்குர்க் 23 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் பவுலர்களில் சிறப்பாக பவுலிங் செய்த சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நூர் அகமது ஒரு விக்கெட்டை எடுத்தார். அணியின் ஸ்டிரைக் பவுலிரான மோகித் ஷர்மா 73 ரன்களை வாரி வழங்கி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

அக்‌ஷர் படேல் அரைசதம்

டெல்லி அணியின் ஓபனர்களான ப்ருத்வி ஷா 11, நல்ல பார்மில் இருந்து வந்த ஜேக் பிராசர் மெக்குர்க் 23 ரன்கள் அடித்து அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதைத்தொடர்ந்து அந்த அணியின் பவுலிங் ஆல்ரவுண்டரான அக்‌ஷர் படேல் புரொமோட் செய்யப்பட்ட மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். இவருடன் நான்காவது பேட்ஸ்மேனாக பேட் செய்த ஷாய் ஹோப் 54 ரன்னில் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த ரிஷப் பண்ட் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த படேல் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். அரைசதத்தை பூர்த்தி செய்த படேல் 43 பந்துகளில் 63 ரன்கள் அடித்து அவுட்டானர். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்தார். படேல் - பண்ட் இணைந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பண்ட் அதிரடி பினிஷ்

கடைசி வரை பேட் செய்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்த பண்ட் அதிரடி பினிஷ் கொடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் மட்டும் 31 ரன்கள் அடித்தார். இதில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கும். 44 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்த பண்ட் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்களை அடித்தார்.

அவருடன் பேட் செய்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் தன் பங்குக்கு 7 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். இதில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

மோகித் மோசமான பவுலிங்

குஜராத் அணியின் ஸ்டிரைக் பவுலராக இருந்து வந்த மோகித் ஷர்மா இந்த போட்டியில் 4 ஓவரில் 73 ரன்களை வாரி வழங்கி விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் தனது மோசமான பவுலிங்கை பதிவு செய்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point