தமிழ் செய்திகள்  /  Cricket  /  Rcb And Lsg Equally Powers In Batting And All Eyes Looking For Mayank Yadav

RCB vs LSG Preview: ஆர்சிபி பேட்டிங்கை மிரட்ட லக்னோ வைத்திருக்கும் ட்ரம்கார்டு பவுலர்! அனைத்து கண்களும் அவர் மீதே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 02, 2024 06:30 AM IST

பேட்டிங் வரிசையாக வலுவாக கொண்டிருக்கும் இரு அணிகளும் பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களுரு மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய இருக்கின்றன. அதிவேகமாக பவுலிங் செய்யும் லக்னோ இளம் பவுலர் மயங்க் யாதவ் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பலப்பரிட்சை
ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பலப்பரிட்சை

ட்ரெண்டிங் செய்திகள்

லக்னோ விளையாடியிருக்கும் 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. ஆர்சிபி அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்விகளை சந்தித்துள்ளது.

பார்முக்கு வர வேண்டிய கட்டாயத்தில் டூ பிளெசிஸ், மேக்ஸ்வெல்

ஆர்சிபி அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான அணியின் கேப்டன், ஓபனிங் பேட்ஸ்மேன் டூ பிளெசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். முதல் போட்டியில் அதிரடி காட்டிய டூ பிளெசில் அதற்கு அடுத்து இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பினார், கோலி மீதான அழுத்தத்தை குறைக்க வேண்டுமானால் டூ பிளெசிஸ் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும்.

அதேபோல் பேட்டிங் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனும் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தினால் ஆர்சிபி பேட்டிங் வலுபெறும்.

கவலை அளிக்கும் கேஎல் ராகுல் பிட்னஸ்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பிட்னஸ் அணிக்கு கவலை தரக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது. காயத்திலிருந்து குணமடைந்திருக்கும் அவரது பனிச்சுமையை குறைக்கும் விதமாக நிக்கோலஸ் பூரானை கேப்டனாக்கியது அணி நிர்வாகம். அதேபோல் கேஎல் ராகுல் இம்பேக்ட் வீரராகவும் செயல்பாட்டார். இந்த சூழ்நிலையில் அவர் பேட் செய்வதற்கு உகந்தவாறு பிட்னஸுடன இருக்க வேண்டும் என்பது அணியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மயங்க் யாதவ்

டெல்லியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் 155 கிமீ வேகத்தில் பந்து வீசி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இது தான் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேகமாக வீசப்பட்ட பந்தாக உள்ளது. சராசரியாக 148 கிமீ வேகம் வரை பந்து வீசும் அவரது பவுலிங் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பேட்டிங் செர்க்கபுரியான சின்னசாமி மைதானத்தில் அவரது பவுலிங் செயல்பாடு அணிக்கு உதவிகரமாக இருக்குமா என்பதை பார்க்க வேண்டும்.

ஆர்சிபி பவுலிங் காம்போவில் மாற்றம்

ஆர்சிபி அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அல்சாரி ஜோசப் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக இருப்பதால் அவருக்கு பதிலாக லாக்கி பெர்குசன், ரீஸ் டோப்லி ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படலாம். இவர்களுடன் ஆகேஷ் தீப்பும் விளையாடும் வாய்ப்பை பெறலாம் என தெரிகிறது

பிட்ச் நிலவரம்

ஆடுகளத்தின் மேற்பரப்பில் புற்கள் காணப்படுகிறது. இதனால் விரிசல் ஏற்படுவது தடுக்கப்படும். வழக்கம்போல் பேட்ஸ்மேன்கள் சாதிப்பார்கள் எனவும் ரன் வேட்டை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை மோதிக்கொண்ட 4 போட்டிகளில் ஆர்சிபி 4, லக்னோ ஒரு முறை வென்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டியில் லக்னோ வென்றுள்ளது.

அத்துடன் இந்த இரு அணிகளும் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட அணிகளாகவும், பவுலிங்கில் கொஞ்சை வலிமை இழந்து காணப்படும் அணிகளாகவும் இருக்கின்றன. அதன்படி பார்க்கையில் சமபலம் பொருந்தியிருக்கும் இந்த இரண்டு அணிகளும் பேட்டிங்கை நம்பியே களமிறங்குகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point