Rashid Khan: இந்தியாவுடனான டி20 தொடர்! காயத்தால் விலகிய ரஷித் கான் விலகல் - மாற்றாக மற்றொரு லெக் ஸ்பின்னர்
முதுகு வலியால் அவதிக்குள்ளாகி வரும் ஆப்கானிஸ்தான் பவுலிங் ஆல்ரவுண்டரான ரஷித் கான், அணியுடன் இந்தியாவுக்கு வந்திருந்தபோதிலும் டி20 தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மெஹாலியில் நாளை நடைபெறுகிறது.
இதையடுத்து இந்த தொடரலிருந்து ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் ஆல்ரவுண்டரான ரஷித் கான் விலகியுள்ளார். முதுகின் கீழ் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் ரஷித் கான். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு பின் மெல்ல குணமாகி வரும் அவர் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் தேர்வானார்.
ஆனால் அவருக்கு வலி குறையாத நிலையில், தொடர்ந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளராம். இதனால் இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து ரஷித் கான் விலகியுள்ளார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் கூறியதாவது: " ரஷித் கான் முழுவதுமாக பிட்டாக இல்லை. இருந்தாலும் அணியினருடன் பயணித்தார். விரைவில் அவர் குணமடைவார் என நம்பலாம். மருத்துவர் ஆலோசனையின்படி புத்துணர்வு முகாமில் இருந்து வருகிறார். அவரை இந்த தொடரில் மிஸ் செய்கிறோம்.
ரிஷித் கானின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
உலகக் கோப்பை 2023 தொடருக்கு பின் ரஷித் கான் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது ரஷித் கான் அணியில் இடம்பெறாத நிலையில், அவரது இடத்தை முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி, நூர் அகமது, கைஸ் அஹ்மத், ஷரபுதீன் அஷ்ரஃப் ஆகியோரில் யாராவது நிரப்புவார்கள் என தெரிகிறது.
கைஸ் அஹ்மத் ஆப்கானிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னராக உள்ளார். ரிஷித் இல்லாத குறையை அவர் தீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார் கைஸ் அஹ்மத். அவரது சராசரி 11.16, ரன்ரெட் 6.70ஆக உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் ஜனவரி 11, 14, 17 ஆகிய தேதிகளில் மெஹாலி, பெங்களுர, இந்தூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்