Rashid Khan: BBL தொடரில் இருந்து விலகினார் ரஷித் கான்-காரணம் இதுதான்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rashid Khan: Bbl தொடரில் இருந்து விலகினார் ரஷித் கான்-காரணம் இதுதான்

Rashid Khan: BBL தொடரில் இருந்து விலகினார் ரஷித் கான்-காரணம் இதுதான்

Manigandan K T HT Tamil
Jan 06, 2024 04:19 PM IST

அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ரஷித் இடம்பெற்றிருந்தார். காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ரஷித் கான்
கிரிக்கெட் வீரர் ரஷித் கான் (Adelaide Strikers)

பிக் பாஷ் லீக் என்பது ஆஸ்திரேலிய ஆண்கள் தொழில்முறை கிளப் டுவென்டி 20 கிரிக்கெட் லீக் ஆகும், இது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் 2011 இல் தொடங்கப்பட்டது. இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரைப் போன்றது.

இந்தத் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ரஷித் கான் இடம்பெற்றிருந்தார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நட்சத்திர ஆல்-ரவுண்டருக்கு உடனடியாக மாற்றாக அவர்கள் யாரையும் அறிவிக்கவில்லை, ஆனால் விரைவில் மாற்று வீரரை அறிவிக்க வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி உட்பட நான்கு போட்டிகளை வென்ற ஆப்கானிஸ்தான் அணியில் ஒன்பது போட்டிகளிலும் இடம்பெற்ற ரஷீதுக்கு அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்புள்ளது.

அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு இவர் இல்லாதது ஒரு பெரிய இழப்பு என்று அதன் பொது மேலாளர் டிம் நீல்சன் கூறினார். "ரஷித் ஸ்ட்ரைக்கர்ஸின் சிறந்த பிளேயர். ஏழு ஆண்டுகளாக எங்கள் அணி ரசிகர்களுக்கு விருப்பமானவர், எனவே அவரை நாங்கள் மிஸ் செய்வோம்" என்று நீல்சன் கூறினார்.

மேலும், "அவர் BBL இல் விளையாடுவதை எவ்வளவு விரும்புகிறார் என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் விளையாட்டில் அவரது நீண்டகால ஈடுபாட்டை உறுதிப்படுத்த இந்த காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அவரை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ரஷித் 2017 முதல் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். எங்கள் நிர்வாகம் மற்றும் பயிற்சி ஊழியர்கள் இப்போது வரவிருக்கும் சீசனில் ரஷிதுக்கு பதிலாக வேறு வீரரை களமிறக்குவது குறித்து யோசிப்பார்கள், மேலும் மாற்று வீரர் சரியான நேரத்தில் அறிவிக்கப்படுவார்." என்றார் நீல்சன்.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் வரவிருக்கும் பிபிஎல் சீசன்களில் ரஷிதை தக்கவைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும். முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிபிஎல்லில் இருந்து விலகுவதாக ரஷித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிபிஎல்லில் ஸ்ட்ரைக்கர்ஸ் சிறப்பாக விளையாடவில்லை. அவர்கள் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தனர் மற்றும் இந்த முறை ஒரு மேம்பட்ட விளையாட்டை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் டிசம்பர் 9 அன்று பிரிஸ்பேன் ஹீட்க்கு எதிராக தங்கள் போட்டியைத் தொடங்குகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.