தமிழ் செய்திகள்  /  Cricket  /  Rajasthan Royals Beat Mumbai And Become First Team To Do Hatrick Victory In Ipl 2024

RR vs MI Result: எனது விக்கெட்டு தான் திருப்புமுனை - பாண்ட்யா புலம்பல்! ஹாட்ரிக் வெற்றியுடன் டாப்பில் ராஜஸ்தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 01, 2024 11:21 PM IST

மிகவும் எளிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் டாப் ஆர்டர் கைகொடுக்காத நிலையில், கடந்த போட்டியில் கலக்கிய ரியான் பராக் இந்த போட்டியிலும் அரைசதமடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் ரியான் பராக்
பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் ரியான் பராக் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்கில் சுருண்ட மும்பை இந்தியன்ஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 34, திலக் வர்மா 32, டிம் டேவிட் 17 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்து மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர். ட்ரெண்ட் போல்ட், யஸ்வேந்திர சஹால் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர். நந்த்ரே பர்கர், ஆவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்

எளிய இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்த சீசனில் ஹாட்ரிக் தோல்வியை பெற்று இதுவரை வெற்றி பெறாத அணியாக மும்பை இந்தியன்ஸ் இருந்து வருகிறது.

ராஜஸ்தான் அணியில் இளம் பேட்ஸ்மேன் ரியான் பராக் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்கள் எடுத்தார்.

மும்பை பவுலர்களில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் விளையாடி 3 போட்டிகளையும் வென்று முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

டாப் ஆர்டர் சொதப்பல்

ராஜஸ்தான் ராயல்ஸ் டாப் ஆர்டர் மற்றொரு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஓபனிங் பேட்ஸ்மேன் யஸஷ்வி ஜெய்ஸ்வால் 10, ஜோஸ் பட்லர் 13, சஞ்சு சாம்சன் 12 ரன்கள் எடுத்து பெரிதாக ரன்குவிக்காமல் அவுட்டானார்கள். 

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரியான் பராக் பொறுப்புடன் பேட் செய்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த அவர் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அடித்தார்.

எனது விக்கெட் ஆட்டத்தை மாற்றியது

போட்டிக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, "நாங்கள் 150 முதல் 160 ரன்கள் வரை எடுக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் எனது விக்கெட் திருப்புமுனையாக அமைந்தது. நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.

பிட்ச் பவுலர்களுக்கும் உதவியத நல்ல விஷயம் தான். இதை எதிர்பார்க்கவில்லை. இது புோன்ற சர்ப்ரைஸ் மீண்டும் நடக்காது என எதிர்பார்க்கிறேன். ஒரு குழுவாக நாங்கள் தைரியத்துடனும், ஒழுக்கத்துடன் இனி வரும் போட்டிகளில் செயல்படுவோம்" என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point