KL Rahul Half century: 50வது டெஸ்டில் அரை சதம் விளாசி அசத்திய கே.எல்.ராகுல்!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kl Rahul Half Century: 50வது டெஸ்டில் அரை சதம் விளாசி அசத்திய கே.எல்.ராகுல்!

KL Rahul Half century: 50வது டெஸ்டில் அரை சதம் விளாசி அசத்திய கே.எல்.ராகுல்!

Manigandan K T HT Tamil
Jan 26, 2024 12:34 PM IST

Eng vs Ind 1st Test: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது.

இந்திய பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் அரை சதம் விளாசிய மகிழ்ச்சியில் காணப்படுகிறார்
இந்திய பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் அரை சதம் விளாசிய மகிழ்ச்சியில் காணப்படுகிறார் (AP)

ராகுல் 6 பவுண்டரிகள் விளாசி அரை சதம் விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் உடன் விளையாடினார். இந்தக் கூட்டணி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டு கொண்டு வந்தது.

இந்தியா இன்னும் 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்கள் விளாசி சிறந்த தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் கேப்டன் ரோகித் 24 ரன்களிலும், சுப்மன் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி நடைடையக் கட்டினார். தற்போது ஜடேஜா, ராகுல் விளையாடி வருகின்றனர்.

முன்னதாக, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்கு பிறகு இந்தியா, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நேற்று காலை தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்திய பவுலிங்கில் ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அக்சர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இங்கிலாந்து பேட்டிங்கில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 70 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு அளிக்கவில்லை.

முதல் நாள் தேநீர் இடைவெளிக்கு பின் அடுத்த 20 நிமிடங்களில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை முடித்தது. ஹைதராபாத் ஆடுகளம் முதல் நாளிலேயே பந்து நன்கு திரும்பும் விதமாகவும், ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவும் செயல்பட்டது. இதை நன்கு பயன்படுத்தி கொண்ட அஸ்வின் - ஜடேஜா ஜோடி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று பேட் செய்ய விடாமல் துல்லியமாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இவ்வாறாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களில் ஆட்டமிழந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.