தமிழ் செய்திகள்  /  Cricket  /  Quinton De Kock Fifty, Pooran Quick 40 Helps Lsg To Set 182 Runs Against Rcb

RCB vs LSG Innings Break: அதிரடியில் மிரட்டிய டி காக், பூரான்! கடைசி 2 ஓவரில் 5 சிக்ஸர்கள் - ஆர்சிபிக்கு சவால் இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 02, 2024 09:20 PM IST

லக்னே அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் குவன்டைன் டி காக் அரைசதமடிக்க, கடைசி கட்டத்தில் அதிரடியான ஆட்டத்தால் பினிஷ் செய்தார் அணி கேப்டனான நிக்கோலஸ் பூரான். ஆர்சிபிக்கு சவாலான இலக்கை லக்னோ அணி நிர்ணயித்துள்ளது.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் குவன்டைன் டி காக்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் குவன்டைன் டி காக் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

லக்னோ விளையாடியிருக்கும் 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. ஆர்சிபி அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்த போட்டியில் ஆர்சிபி அணியில் அல்சாரி ஜோசப்புக்கு பதிலாக டாப்லேவும், லக்னோ அணியில் மோக்சின் கானுக்கு பதிலாக யாஸ் தாக்கூரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆர்சிபி பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோ அணியில் அதிகபட்சமாக குவன்டைன் டி காக் 81 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக நிக்கோலஸ் பூரான் 40, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 24 ரன்கள் எடுத்துள்ளனர்.

ஆர்சிபி பவுலர்களில் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரீஸ் டாப்லே, யஷ் தயாள், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

டி காக் அரைசதம்

இந்த போட்யிலும் கேஎல் ராகுல் சாதரண வீரராக களமிறங்கினார். 20 ரன்கள் எடுத்த அவர் முதல் விக்கெட்டாக அவுட்டானார். அவர் தனது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் அடித்தார்.

இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்னில் வெளியேறினார்.

இதற்கிடையே ஓபனிங் பேட்ஸ்மேனாக பேட் செய்த டி காக் அதிரடியாக ரன் குவித்து வந்தார். அரைசதத்தை பூர்த்தி செய்த அவர் 81 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 8 பவுண்டரி, 5 சிக்ஸர்களை தனது இன்னிங்ஸில் அடித்தார்.

நிக்கோலஸ் பூரான் அதிரடி

இந்த போட்டியிலும் நிக்கோலஸ் பூரான் கேப்டனாக செயல்பட்டார். கடைசி கட்டத்தில் பேட் செய்த பூரான் தனது பாணியில் அதிரடி வேட்டை நிகழ்த்தினார். கடைசி 2 ஓவர்களில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த பூரான் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அதேபோல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பேட் செய்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் விரைவாக 24 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து சொதப்பும் ஆயுஷ் பதோனி

இளம் பேட்ஸ்மேனான ஆயுஷ் பதோனி இந்த சீசனின் தொடர்ந்து மூன்றாவது முறையாக பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. முதல் போட்டியில் 1, இரண்டாவது போட்டியில் 8 ரன் மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து ஆர்சிபிக்கு எதிரான இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் பேட் செய்ய வந்த அவர் டக்அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v

IPL_Entry_Point