தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pbks Vs Rr Innings Break: அஸ்வினுக்கு டாடா! ராஜஸ்தான் பவுலர்களுக்கு எதிராக தட்டி தடுமாறிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்

PBKS vs RR Innings Break: அஸ்வினுக்கு டாடா! ராஜஸ்தான் பவுலர்களுக்கு எதிராக தட்டி தடுமாறிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 13, 2024 09:36 PM IST

ஒருவர் கூட அரைசதமடிக்காத நிலையில் கடைசி நேரத்தில் இம்பேக்ட் வீரராக களமிறங்கி கொஞ்சம் வானவேடிக்கை நிகழ்த்தினார் அஷ்டோஷ் ஷர்மா. இதனால் பஞ்சாப் ஸ்கோரும் 147 என உயர்ந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் பேட்ஸ்மேன் அஷ்டோஷ் ஷர்மா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் பேட்ஸ்மேன் அஷ்டோஷ் ஷர்மா

ட்ரெண்டிங் செய்திகள்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் லேசான காயம் காரணமாக ஷிகர் தவான் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அதர்வ தைடே சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் தவான் இல்லாத நிலையில், ஆல்ரவுண்டர் சாம் கரன் கேப்டனாக இந்த போட்டியில் செயல்படுகிறார். சிகந்தர் ராசாவுக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் லேசான காயம் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு பதிலாக ரோவ்மன் பவல், தனுஷ் கோட்யான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இளம் வீரரான தனுஷ் கோட்யான் முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட அஷ்டோஷ் ஷர்மா 31 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஜித்தேஷ் ஷர்மா 29, லியாம் லிவிங்ஸ்டன் 21 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் பவுலர்களில் ஸ்பின்னரான கேசவ் மகாராஜ், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யஸ்வேந்திர சஹால், குல்தீப் சென், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பேட்டிங் சொதப்பல்

ராஜஸ்தான் பவுலர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தட்டி தடுமாறினார் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள். ஓபனர்கள் அதர்வா தைடே 15, ஜானி பேர்ஸ்டோ 15, இவர்களுக்கு அடுத்தபடியாக பேட் செய்த பிரப்சிம்ரன் சிங் 10, சாம் கரன் 6 என டாப் ஆர்டர் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஷாங்க் சிங் 9 ரன்னில் நடையை கட்டினார்.

கடைசி நேரத்தில் அதிரடி

கொஞ்சம் பொறுப்புடன் பேட் செய்த ஜித்தேஷ் ஷர்மா 29 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார். அதேபோல் கொஞ்சம் அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த பின்னர் துர்தஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

கிட்டத்தட்ட அனைத்து முக்கிய விக்கெட்டுகளும் வீழ்ந்த நிலையில், இம்பேக்ட் வீரராக அஷ்டோஷ் ஷர்மா களமிறக்கப்பட்டார். நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய அவர் கடைசி கட்டத்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி என 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதனால் அணியின் ஸ்கோரும் சற்று அதிகரித்தது.

ராஜஸ்தான் பவுலர்கள் கலக்கல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுலிங் செய்த அனைவருமே சிறப்பாக பந்து வீசினர். ஸ்பின்னர் கேசவ் மகராஜ் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point