DC vs CSK Toss: சிஎஸ்கேவுக்காக அதிரடி பேட்டர், அதிவேக பவுலரை களமிறங்கிய டெல்லி! முதல் சதமடித்த மைதானத்தில் தோனி ஆட்டம்-pritivi shaw ishant sharma comes in dc elected to bat against csk - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Dc Vs Csk Toss: சிஎஸ்கேவுக்காக அதிரடி பேட்டர், அதிவேக பவுலரை களமிறங்கிய டெல்லி! முதல் சதமடித்த மைதானத்தில் தோனி ஆட்டம்

DC vs CSK Toss: சிஎஸ்கேவுக்காக அதிரடி பேட்டர், அதிவேக பவுலரை களமிறங்கிய டெல்லி! முதல் சதமடித்த மைதானத்தில் தோனி ஆட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 31, 2024 07:25 PM IST

தோனி தனது முதல் சதத்தை அடித்து இந்த உலகுக்கு தான் யார் என்பதை நிருபித்த விசாகபட்டினம் மைதானத்தில் இதுதான் அவரது கடைசி போட்டியாக இருக்கலாம் என்பது அவரது பேட்டிங் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு

முதல் இரண்டு போட்டிகளை உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், வெளியூர் மைதானத்தில் முதல் போட்டியில் களமிறங்குகிறது.

டெல்லி பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் குல்தீப் யாதவ், ரிக்கி புயி ஆகியோருக்கு பதிலாக ப்ருத்வி ஷா, இஷாந்த ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறது.

கடந்த போட்டியை காயத்தால் மிஸ் செய்த இஷாந்த் ஷர்மா, சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் இந்த சீசனின் முதல் போட்டியில் ப்ருதிவி ஷா களமிறங்க இருக்கிறார்.

சிஎஸ்கே - டெல்லி கேபிடல்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட 29 போட்டிகளில் சிஎஸ்கே 19, டெல்லி கேபிடல்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. விசாகப்பட்டினம் டெல்லிக்கு ராசியில்லாத மைதானமாக இருந்துள்ளது.

இங்கு விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது டெல்லி கேபிடல்ஸ். அத்துடன் 2019 சீசனில் இங்கு நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் சுற்று போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக டெல்லி தோல்வியை தழுவியது.

தோனி தனது முதல் சதத்தை அடித்து இந்த உலகுக்கு தான் யார் என்பதை நிருபித்த மைதானமாக விசாகப்பட்டினம் உள்ளது. எனவே இந்த சீசன் அவரது கடைசி தொடராக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், இன்றைய போட்டியில் பேட் செய்தால் சிறப்பானதாக இருக்கும்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

டெல்லி கேபிடல்ஸ்: ப்ருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் ஷர்மா, கலீல் அகமது

இம்பேக்ட் வீரர்கள் - சுமித், குஷாக்ரா, சலாம், ஷுபம் துபே, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமி ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மதிஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்

இம்பேக்ட் வீரர்கள் - ஷிவம் டூபே, ஷர்துல் தாக்கூர், ரஷீத், மொயீன் அலி, மிட்செல் சான்ட்னர்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.