Kohli and Rohit: சீனியர் வீரர்கள் கோலி, ரோஹித் நீக்கம் ஏன்? இந்திய பவுலிங் பயிற்சியாளர் மகாம்ப்ரே நீண்ட விளக்கம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kohli And Rohit: சீனியர் வீரர்கள் கோலி, ரோஹித் நீக்கம் ஏன்? இந்திய பவுலிங் பயிற்சியாளர் மகாம்ப்ரே நீண்ட விளக்கம்

Kohli and Rohit: சீனியர் வீரர்கள் கோலி, ரோஹித் நீக்கம் ஏன்? இந்திய பவுலிங் பயிற்சியாளர் மகாம்ப்ரே நீண்ட விளக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 09, 2023 05:52 PM IST

2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்காக டி20 போட்டியில் விளையாடவில்லை.

விராட் கோலி - ரோஹித் ஷர்மா
விராட் கோலி - ரோஹித் ஷர்மா

சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் தென் ஆப்பரிக்காவில் நடைபெறும் வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்களுக்கான அணியில் இடம்பெறவில்லை. வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் பாக்ஸிங்

டே டெஸ்ட் போட்டியில் இவர்கள் விளையாடுகின்றனர்.

ரோஹித், கோலியின் நீக்கம் குறித்து இந்தய பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மகாம்ப்ரே கூறியதாவது:

"இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள் முக்கியமில்லை என்பது அர்த்தமாகது. அதே சமயம் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் சமநிலையை பெற வேண்டும்.

ரோஹித், கோலி ஆகியோர் டி20 போட்டிகளை பொறுத்தவரை ஐபிஎல், இந்தியாவுக்காக என குறிப்பிட்ட பங்களிப்பை தருகிறார்கள். இதுபோன்ற இரு தரப்பு தொடர்களில் வீரர்களின் பொருந்தும் தன்மையை பார்க்க வேண்டும். போட்டி சூழ்நிலை குறித்த விழப்புணர்வு, அழுத்தமான சூழ்நிலை, இந்திய ஜெர்சி அவர்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கிறது என்பதை பார்க்க வேண்டும்" என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.