Babar Azam: 'பாபர் அசாம் கேப்டன் பதவியை துறக்க வேண்டும் என கடந்த ஆண்டே கூறினேன்'-முன்னாள் பாக்., வீரர்
திங்களன்று 2023 உலகக் கோப்பையில் அணியின் தொடர்ச்சியான மூன்றாவது தோல்வியைத் தொடர்ந்து பாபர் அசாமின் கேப்டன்சி குறித்த தனது கருத்தை முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாசித் அலி ரசிகர்களுக்கு நினைவூட்டினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம் கேப்டன் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என ஓராண்டுக்கு முன்பே கூறினேன் என அந்நாட்டு முன்னாள் பேட்ஸ்மேன் பாசித் அலி தெரிவித்தார்.
2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சியூட்டும் தோல்வியை எதிர்கொண்டபோது பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
இது ஒரு நாள் போட்டிகளில் அந்த அணிக்கு எதிரான பாகிஸ்தானின் முதல் தோல்வியாகும். பாகிஸ்தான் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆனால் எதிர்மறை நிகர ரன் ரேட் விகிதத்துடன் இருக்கிறது; இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில், பாபர் அணி எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல், நாக்-அவுட் கட்டத்தில் ஒரு இடத்தைப் பெற அவர்களுக்குச் சாதகமாகச் செல்ல மற்ற முடிவுகளையும் நம்பியிருக்க வேண்டியிருக்கும்.
ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் இலக்கை 8 விக்கெட்டுகள் மற்றும் ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் வெற்றிகரமாக எட்டியது. பாகிஸ்தானின் பந்துவீச்சு - குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் - சரியாக இல்லாதது முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. கேப்டன் பாபர் அசாமும் அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டார்.
முன்னாள் பாகிஸ்தான் பேட்டர் பாஸித் அலி, ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாபரின் கேப்டன்சியை விமர்சித்தார், மேலும் ஒரு வருடத்திற்கு முன்பு வீரரின் தலைமை குறித்த அவரது அறிக்கையை ரசிகர்களுக்கு நினைவூட்டினார்.
"ஒரு வருடத்திற்கு முன்பு எனது சேனலில் பாபர் ஆசாம் ஒரு சிறந்த பேட்டர் என்று கூறினேன். விராட் கோலி செய்தது போல் அவரும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். விராட் பதவி விலகிவிட்டு, அவரது ஆட்டத்தை கவனித்தார்" என பாசித் அலி ARY நியூஸிடம் கூறினார்.
"ஆனால், நாம் அனைவரும் அறிந்தபடி, சமூக ஊடகங்களில் சிலர் எனது வார்த்தைகளைத் திரித்து, எனக்கு பாபர் அசாமைப் பிடிக்கவில்லை, நான் ஒரு துரோகி என முத்திரை குத்தினர்" என்று பாசித் அலி பழையதை நினைவுப்படுத்தினார்.
பாபர் தொடர்ந்து பின்னடைவை எதிர்கொண்டாலும், தனது சொந்த செயல்திறனில் கேப்டன் பதவி எந்த அழுத்தத்தையும் தரவில்லை என்று கூறினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது பாபரின் அதிகபட்ச ஸ்கோர் 74, இதுவரை ஐந்து போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார்.
"கேப்டன்சியைப் பொறுத்தவரை, என் மீது அல்லது எனது பேட்டிங்கில் எனக்கு அதிக அழுத்தம் இல்லை. பேட்டிங்கில் எனது சிறந்ததை வழங்க முயற்சிக்கிறேன்," என்று திங்கட்கிழமை ஆப்கானிஸ்தானிடம் தோல்விக்குப் பிறகு பாபர் கூறினார்.
டாபிக்ஸ்