PBKS vs RR Preview: மைல்கல் சாதனையை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் சஹால்! ஆவலை ஏற்படுத்தும் 2 பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ஆட்டம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Pbks Vs Rr Preview: மைல்கல் சாதனையை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் சஹால்! ஆவலை ஏற்படுத்தும் 2 பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ஆட்டம்

PBKS vs RR Preview: மைல்கல் சாதனையை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் சஹால்! ஆவலை ஏற்படுத்தும் 2 பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ஆட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 13, 2024 06:45 AM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்பின்னர் யஸ்வேந்திர சஹால் மைல்கல் சாதனை, பஞ்சாப் கிங்ஸ் இளம் பேட்ஸ்மேன்களான சஷாங் சிங், அஸ்தோஷ் ஷர்மா ஆகியோரின் ஆட்டத்தை மீதான எதிர்பார்ப்பி்ல உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்
பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இரண்டு இளம் பேட்ஸ்மேன்கள்

பஞ்சாப் அணியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜித்தேஷ் ஷர்மா என வலுவான் பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும் இளம் வீரர்களான அஸ்தோஷ் ஷர்மா, சஷாங்க் சிங் ஆகியோர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது .

காயத்தால் கடந்த போட்டியில் விளையாடாத லியாம் லிவிங்ஸ்டன் பிட்னஸை பொறுத்து இன்றைய போட்டியில் களமிறங்கலாம். பவுலிங்கில் சாம் கரன், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ஹரிப்ரீத் ப்ரார் என வலுவாகவே உள்ளது

மைல்கல் சாதனையை நோக்கி சஹால்

ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்பின்னரான யஸ்வேந்திரா சஹால் இன்னும் 3 விக்கெட்டுகள் எடுத்தால், ஐபிஎல் தொடரில் முதல் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனையை புரிவார். இன்றைய போட்டியில் அவர் நிகழ்த்துவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

கம்பேக் செய்ய காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என பக்காவான அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் இருந்து வருகிறது. இதனால் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக முதல் தோல்வியை சந்தித்தது. இதையயடுத்து தோல்வியிலிருந்து மீண்டு கம்பேக் கொடுக்கும் முனைப்பில் களமிறங்கும்.

அஸ்வின் இதுவரை தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தாத நிலையில் இன்றைய போட்டியில் தனது பவுலிங்கை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பிட்ச் நிலவரம்

முல்லான்பூர் ஆடுகளம் வேகபந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் இந்திய ஆடுகளமாக இருந்து வருகிறது. அத்துடன் இங்கு நல்ல பவுன்ஸ் கிடைக்கவும் செய்யும் என கூறப்படுகிறது. புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசினால் பேட்மேன்களை திணறடிக்கலாம். பனிபொலிவு பிரச்னை இருப்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளுக்கும் 26 முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 11 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அதிகபட்ச ஸ்கோர் 223 என உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகபட்ச ஸ்கோர் 226 என உள்ளது. அதாவது பஞ்சாப் கிங்ஸ் அடித்த 223 ரன்களை சேஸ் செய்து 226 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச சேஸிங்காக இந்த போட்டி அமைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.