Pakistan vs Ireland: டி20 உலகக் கோப்பை.. அயர்லாந்துக்கு எதிரான கடைசி போட்டி.. ஆறுதல் வெற்றியுடன் வெளியேறிய பாகிஸ்தான்!
T20 World Cup 2024, Pakistan vs Ireland: அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இது தவிர கனடா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஓமன், நமீபியா, நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினி, நேபாளம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.
பாகிஸ்தான் - அயர்லாந்து
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இரவு (ஜூன் 16) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதின. புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற்ற இப்போட்டில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அயர்லாந்து பேட்டிங்
இதனைத் தொடர்ந்து அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேரெத் டெலானி 31 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய, ஜோஷ்வா லிட்டில் 22 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷகின் அஃப்ரிடி மற்றும் இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரௌஃப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் வெற்றி
இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இருப்பினும் அயர்லாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். ஒரு முனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், கேப்டன் பாபர் அசாம் பொறுமையாக ஆடி கடைசி வரை அவுட்டாகாமல் 32 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த ஆறுதல் வெற்றியுடன் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது.
பாகிஸ்தான் அணிக்கு நிலவும் குரூப்பிசம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்களின்படி, பாபர் அசாம் கேப்டனாக மீண்டும் வருவதில் மிகப்பெரிய சவாலான விஷயமாக அணியை ஒன்றிணைக்கும் விஷயம் உள்ளது. ஆனால் தற்போது நிலவி வரும் குரூப்பிசம் காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியாத எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கேப்டன் பதவியை இழந்ததாலும், தேவைப்படும்போது பாபர் ஆதரவு அளிக்காததாலும் வேகப்பந்து பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி வருத்தமடைந்தாராம். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தன்னை கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படாததில் அதிருப்தி அடைந்தாகவும் கூறப்படுகிறது
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்