தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Pak Live: தொடர் மழை.. ஒரு மணி நேரம் தாமதம்! பாகிஸ்தான் அணியில் முக்கிய மாற்றம் - ரிசர்வ் நாள் இல்லை

IND vs PAK Live: தொடர் மழை.. ஒரு மணி நேரம் தாமதம்! பாகிஸ்தான் அணியில் முக்கிய மாற்றம் - ரிசர்வ் நாள் இல்லை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 09, 2024 08:53 PM IST

தொடர் மழை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்குகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் முக்கிய மாற்றமாக ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டி மழையால் நடக்காமல் போனல் இதற்கு ரிசர்வ் நாள் எதுவும் இல்லை.

தொடர் மழையால் ஒரு மணி நேரம் தாமதம், பாகிஸ்தான் அணியில் முக்கிய மாற்றம்
தொடர் மழையால் ஒரு மணி நேரம் தாமதம், பாகிஸ்தான் அணியில் முக்கிய மாற்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், டி20 உலகக் கோப்பை தொடரை பாசிடிவாக தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் யுஎஸ்ஏ அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

மழையால் தாமதம்

போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பு நியூயார்க்கில் மழை பெய்துள்ளது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை காரணமாக மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு தொடங்குவதாக இருந்த போட்டி, 11 மணிக்கு மாற்றப்பட்டது.

பாகிஸ்தான் பவுலிங்

இதையடுத்து இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே வெற்றி கூட்டணியுடன் களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணியில் அசாம் கானுக்கு பதிலாக இமாத் வாசிம் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் நியூயார்க் மைதானத்தில் இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் நான்கு போட்டிகளில் 3 முறை சேஸிங் செய்த அணியும், ஒரு முறை முதலில் பேட் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் இரண்டு போட்டிகளில் மட்டும்தான் இங்கு 100 ரன்கள் மேல் அடிக்கப்பட்டுள்ளன. கனடா அடித்த 137 ரன்களே இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக உள்ளது. இந்த போட்டியில் கனடா அணி முதலில் பேட்டிங் செய்து, வெற்றி பெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் இதுவரை

டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 5, பாகிஸ்தான் 1, ஒரு போட்டி டையில் முடிவடைந்துள்ளது. அதேபோல் இரு அணிகளும் 12 முறை டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 9, பாகிஸ்தான் 3 முறை வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணி தனது கடைசி 5 டி20 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி கடைசி 5 டி20 போட்டிகளில் 2 தோல்வி, ஒரு டை, 2 போட்டிகள் முடிவு இல்லை.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் டூபே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), உஸ்மான் கான், ஃபகர் ஜமான், ஷதாப் கான், இமாத் வாசிம், இப்திகார் அகமது, ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, முகமது ஆமிர், ஹரிஸ் ராஃப்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டி20 உலகக் கோப்பை 2024