Tamil News  /  Cricket  /  Pak Vs Aus 1st Innings Australia Trail By 307 Runs On Day One

PAK vs AUS 1st Innings: 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த பேட் கம்மின்ஸ்!- முதல் நாளில் பாகிஸ்தான் ஆல்-அவுட்

Manigandan K T HT Tamil
Jan 03, 2024 03:01 PM IST

இன்று சிட்னியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக், சயின் அயூப் ஆகியோர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த பேட் கம்மின்ஸ் (Photo by Saeed KHAN / AFP)
5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த பேட் கம்மின்ஸ் (Photo by Saeed KHAN / AFP) (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆஸி.,க்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இன்று சிட்னியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக், சயின் அயூப் ஆகியோர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

பாக்., கிரிக்கெட் ரசிகர்கள் இப்படி ஆகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பின்னர் கேப்டன் ஷார் மசூத், முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி வந்தனர்.

எனினும், அவர்களது கூட்டணியை பாட் கம்மின்ஸ் தனது அபார பந்துவீச்சால் பிரித்தார். பாபர் 26 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சவுத் ஷகீல் 5 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஷான் மசூத்தும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 96 ரன்களை எடுத்து இருந்தது. பின்னர் முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். மறுமுனையில் அவருக்கு அகா சல்மான் தோள் கொடுத்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் பந்துவீச்சில் ஹேஸில்வுட்டிடம் கேட்ச் ஆனார் ரிஸ்வான்.

அமெர் ஜமால் நிதானமாக விளையாடியதால் அந்த அணியால் ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. அவர் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அகா சல்மான் அரை சதம் விளாசினார். ஆஸி., கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஹேஸில்வுட், லயன், மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இவ்வாறாக 77.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் 313 ரன்களை எடுத்தது. அடுத்து நேரம் இருந்ததால் ஆஸி., பேட்டிங்கை செய்தது. வார்னர், கவாஜா ஆகியோர் களத்தில் உள்ளனர். வார்னர் 6 ரன்களுடன் உள்ளார். 1 ஓவருக்கு 6 ரன்கள் எடுத்துள்ளது ஆஸி., அணி.

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil