தமிழ் செய்திகள்  /  Cricket  /  Pacer Anrich Nortje Joins Team And Dc Looking For First Victory In This Season

RR vs DC Preview: வந்தார் புயல் வேக பவுலர்! ராயல்ஸ் கோட்டையில் கொடி நட்ட தயாராக இருக்கும் கேபிடல்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 28, 2024 07:00 AM IST

இந்த சீசனின் முதல் வெற்றியை எதிர்நோக்கி விளையாட இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் புயல் வேக பவுலர் இணைந்துள்ளார். இதனால் அணியின் பவுலிங் வரிசை வலுவடைந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இன்று மோதல்
ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இன்று மோதல்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. எனவே முதல் வெற்றிக்காக இன்றைய போட்டியில் போராடும் என எதிர்பார்க்கலாம்.

டெல்லி அணி தனது முதல் போட்டியில் வெளியூர் மைதானத்தில் விளையாடிய நிலையில், இரண்டாவது போட்டியையும் வெளியூரில் விளையாட இருக்கிறது. 

டெல்லி அணி பலம்

டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் போட்டியில் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் அச்சுறுத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதையடுத்து தற்போது அணிக்கு வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நார்ட்ஜே அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் அணியின் பவுலிங் சற்று வலுவடைந்துள்ளது. புயல் வேக பவுலரான இவரை இம்பேக்ட் வீரராக கூட களமிறக்கப்படலாம். 

அதேபோல் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்குக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதனால் மிடில் ஆர்டரில் அணியின் பேட்டிங் வரிசை கொஞ்சம் வலுபெறும்.

அதேபோல் முதல் போட்டியில் காயத்தால் அவதிப்பட்ட இஷாந்த் ஷர்மா இந்த போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபனர்களாக டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் விளையாடுவார்கள் என்பதால் ப்ருத்வி ஷா இந்த போட்டியில் விளையாடமாட்டார் என தெரிகிறது.

போட்டி நடைபெற இருக்கும் ஜெயப்பூர் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் விளையாடியிருக்கும் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டும் பெற்றிருப்பது பின்னடைவான விஷயமாக உள்ளது

ராஜஸ்தான் ராயல்ஸ் பலம்

பேட்டிங், பவுலிங் என பக்காவான அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் இருந்து வரும் நிலையில், முதல் போட்டியில் கச்சிதமான வெற்றியை பெற்றது. இளம் வீரர் ரியான் பிராக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்க வாய்ப்பு உள்ளது. பிராக் இடம்பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக ஷுபம் துபே சேர்க்கப்படலாம். மற்றபடி பவுலிங்கில் பெரிதாக எந்த மாற்றமும் செய்வதற்கான சூழல் இல்லை என்றே கூறலாம்.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் அனைத்திலும் உள்ளூர் அணிகள் வெற்றி பெற்றிருப்பதுடன், ஜெய்ப்பூர் மைதானத்தில் டெல்லி அணி 4 தோல்விகளை பெற்றிருப்பது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சாதகமான விஷயமாகவே உள்ளது.

பிட்ச் நிலவரம்

பிட்ச் லேசாக வறட்சியாக காணப்பட்டாலும் ஸ்பின், வேகம் என இரு பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் நிலவும் வறட்சி வேகப்பந்து வீச்சை காட்டிலும் ஸ்பினுக்கு கைகொடுக்கலாம் என கூறப்படுகிறது. பெரிய ஸ்கோர் எடுக்காவிட்டாலும் பேட்ஸ்மேன்களும் சாதிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது

ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை மோதிக்கொண்ட 27 போட்டிகளில் 13 டெல்லி, 14 ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியின் குறைந்தபட்ச ஸ்கோரான 60 ரன்கள், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக எடுத்துள்ளது. கடந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான மோதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point