HT Cricket Special: 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சச்சின் செய்த சம்பவம்! இன்றும் யாராலும் அசைக்க முடியாத சாதனை
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Special: 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சச்சின் செய்த சம்பவம்! இன்றும் யாராலும் அசைக்க முடியாத சாதனை

HT Cricket Special: 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சச்சின் செய்த சம்பவம்! இன்றும் யாராலும் அசைக்க முடியாத சாதனை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 27, 2024 07:25 AM IST

சச்சின் என்கிற ரன் மெஷின் உருவாக காரணமாக இருந்த அந்த சம்பவம் 30 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் தான் நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் நிகழ்ந்தது. அந்த நிகழ்வின் பிளாஷ்பேக்கை பார்க்கலாம்

சச்சின் டென்டுல்கர் பேட்டிங்
சச்சின் டென்டுல்கர் பேட்டிங்

இந்திய கிரிக்கெட்டில் ரன் மெஷினாக இருந்து வந்த சச்சின் டென்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு முதல் மைல்கல் சாதனைகளையும் நிகழ்த்தியவராக இருந்துள்ளார். இப்போது வரையில் அவரது அசைக்க முடியாத சாதனைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் டெல்ட், ஒரு நாள் சேர்த்து 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் ஒரே வீரராக சச்சின் டென்டுல்கர் இருந்து வருகிறார். அவ்வளவு எளிதாக யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக இவரது இந்த சாதனை அமைந்துள்ளது.

1989ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின் டென்டுல்கர், இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் அணியில் நான்காவது, மிடில் ஆர்டர், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே விளையாடி வந்தார். தனக்கு கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தனது திறமையை நிருபித்தி அணியில் நிலையான இடத்தை பிடித்தார்.

மெல்ல மெல்ல தனது அற்புத பேட்டிங்தால் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக உருவெடுத்த அவர் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அந்தஸ்துக்கு முன்னேறினார். அவர் ஒரு ஓபனிங் பேட்ஸ்மேனாக உருவெடுத்தது சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான்

ஓபனராக சச்சின்

நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக நவஜோத் சித்து, அஜய் ஜடேஜா போன்றோர் இருந்தனர். அக்லாந்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சித்து காயம் காரணமாக விளையாடவில்லை.

இதுதான் ஓபனராக சச்சின் டென்டுல்கர் என்ட்ரி கொடுப்பதற்கு காரணமாக அமைந்தது. சித்து இல்லாத இரண்டாவது போட்டியில் அஜய் ஜடேஜாவுடன் இன்னிங்ஸை ஓபன் செய்த சச்சின டென்டுல்கர் அதிரடி ருத்ரதாண்டவம் ஆடினார்.

நியூசிலாந்து பவுலர்களை பொளந்து கட்டிய சச்சின் டென்டுல்கர், 49 பந்துகளில் 82 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த போட்டியில் கேப்டனாக இருந்து சச்சினை ஓபனராக களமிறக்கியவர் முகமது அசாரூதின் 

ஓபனராக சச்சின் சாதனைகள்

இந்த போட்டிதான் ஓபனராக சச்சினுக்கு ஓபனிங் தந்தது. இந்த போட்டிக்கு பின்னர் ஓய்வு பெறும் வரையில் 344 போட்டிகள் ஓபனராக களமிறங்கிய சச்சின் டென்டுல்கர், 15, 310 ரன்கள் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அவர் அடித்த 49 சதங்களில் 45 சதங்கள் தொடக்க பேட்ஸ்மேனாக அடித்தவை தான். ஓபனிங் பேட்ஸ்மேனாக தனது சராசரி 48.29 என வைத்துள்ளார்.

இன்று வரையில் இவரது இந்த சாதனையானது அசைக்க முடியாததாக இருந்து வருகிறது. 

ஓபனராக இல்லாத போட்டிகள்

சச்சின் டென்டுல்கர் ஓபனிங் பேட்ஸ்மேனாக இல்லாமல் 119 போட்டிகள் விளையாடியிருக்கும் நிலையில், 3116 ரன்கள் அடித்துள்ளார். அவரது சராசரியானது 33 என உள்ளது.

சச்சின் என்கிற சகாப்தம் உருவாக காரணமாக இருந்த சம்பவமாக இந்தியா - நியூசிலாந்து இடையே 30 ஆண்டுகளுக்கு முன் மார்ச் 27ஆம் தேதி நடந்த போட்டி அமைந்திருந்தது.

இந்த போட்டியில் சச்சினின் அதிரடியால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.