தமிழ் செய்திகள்  /  Cricket  /  On This Day Pakistan Beat India In Chepauk Stadium And Wasim Akram Lauds Nowledgeable Chennai Crowd

HT Cricket Special:மறக்க முடியுமா? “Knowledgeable chennai crowd”! சென்னையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான த்ரில் டெஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 31, 2024 07:30 AM IST

டைம் மிஷன் இருந்தால் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை வைத்து கங்குலி நாட்அவுட் சொல்லி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் பாகிஸ்தானுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தடுத்திருக்கலாம். பாகிஸ்தான் வீரர்களுக்கு standing ovation கொடுத்து சென்னை ரசிகர்களும் உலக பேமஸ் ஆகியிருக்க மாட்டார்கள்.

சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது
சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது

ட்ரெண்டிங் செய்திகள்

பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல்

1989/90களில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு நாடுகளும் விளையாடின. பாகிஸ்தானில் நடந்த இந்த தொடர் டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து அரசியல் சூழ்நிலை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறாமலேயே இருந்து வந்தது.

பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாட வந்தது பாகிஸ்தான் அணி.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் போட்டி மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, அதுவும் சேப்பாக்கத்தில் நடைபெற்றதால் சென்னை நகரமே ஆரவாரத்துடன் இருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டி நான்கு நாள்கள் நடைபெற்றது. பல்வேறு பரபரப்பான சம்பவங்கள், சாதனைகள் நிகழ்த்தப்பட்ட இந்த போட்டியில் பாகிஸ்தான் 12 ரன்களில், 12 ஆண்டுகளுக்கு சிறப்பானதொரு வெற்றியை பதிவு செய்தது.

சென்னை ரசிகர்களுக்கு பாராட்டு

பரமபதம் விளையாட்டு போல் இந்த போட்டியில் ஒவ்வொரு செஷன்களிலும் இந்தியா, பாகிஸ்தான் என இரு அணிகலும் மாறி மாறி தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வந்தன. இறுதியில் இந்தியாவின் தோல்வி நாட்டின் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தினாலும், சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த ஆரவாரத்துடன் போட்டி முழுவதையும் கண்ட ரசிகர்கள் செயல் உலக பேமஸ் ஆனது.

பாகிஸ்தானின் சிறப்பான ஆட்டத்துக்கு மனதார பாராட்டும் வகையில் எழுந்து நின்று கைகளை தட்டினர். ரசிகர்களின் பாராட்டால் நெகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள், மைதானம் முழுவதும் சுற்றி வந்து சென்னை ரசிகர்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டனர். போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் ரசிகர்களின் இந்த செயலை தனித்து குறிப்பிட்ட பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம், 'Knowledgable chennai crowd' என்று பாராட்டவும் செய்தார்.

பாகிஸ்தான் வெற்றிக்கு எழுந்து நின்று கைதட்டிய சென்னை ரசிகர்கள்
பாகிஸ்தான் வெற்றிக்கு எழுந்து நின்று கைதட்டிய சென்னை ரசிகர்கள்

கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக ரசிகர்கள் பார்த்து கொண்டாடியுள்ளனர். 'Knowledgable chennai crowd' என்று சொன்னதோடு, அணிகளின் வெற்றி தோல்வியை விட கிரிக்கெட் மதிக்க தெரிந்த ரசிகர்கள் என பாராட்டு பத்திரம் வாசித்தார்.

கிரிக்கெட் விளையாட்டு மீது உச்சக்கட்ட அன்பை செலுத்தும் ரசிகர்கள் தங்கள் அணி வீழ்ந்தபோதிலும், எதிரணியினரை சிறப்பான ஆட்டத்தை அங்கீகரிக்கும் பழக்கத்தை ஜெண்டில் மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் விதைத்த சம்பவமாக இது அமைந்தது.

என்னதான் இருந்தாலும் இந்திய அணி பெற்றிருக்கும் தோல்வியை விட்டு, எப்படி பாகிஸ்தான் அணி வெற்றியை கொண்டாடினார்கள் என்கிற கேள்வியும் பலருக்கு எழுவதை தடுக்க முடியாது. பாகிஸ்தானுக்கு ஆதரவான ரசிகர்களின் கொண்டாட்டத்தை இன்றும் பலரால் ஏற்க முடியாமலே உள்ளது.

ஆனால் ஆட்டம் நடந்த நான்கு நாள்கள், 12 செஷன்களின் நிகழ்ந்த திருப்புமுனைகளையும், பரபரப்புகளையும் உற்று நோக்கினால் பாகிஸ்தானுக்காக ஏன் இந்த கொண்டாட்டம் வெளிப்படுத்தப்பட்டது என்பது தெளிவாக புரியும்.

இந்தியா - பாகிஸ்தான் சென்னை டெஸ்ட் முழு விவரம்

டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்கிஸ் 238 ரன்களில் ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் பேட்டிங் படையை கும்ப்ளே - ஸ்ரீநாத் கூட்டணி காலி செய்தனர்.பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா 16 ரன்கள் முன்னிலை பெற்று 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வந்த ஒன் அண்ட் ஒன்லி சச்சின் டக்அவுட்டாகி வெளியேறினார். ஆனாலும் அப்போது அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களாக இருந்து வந்த கங்குலி 54, டிராவிட் 53, ஓபனிங் பேட்ஸ்மேனான தமிழ்நாட்டை சேர்ந்த சடகோபன் ரமேஷ் 43 ரன்கள் எடுக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற காரணமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான், முன்னிணி பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் காலி செய்தாலும் 18 வயது நிரம்பிய இளம் பேட்ஸ்மேன் அப்ரீடி அச்சாரம் போல் நிலைத்து நின்று பேட் செய்தார். சதமடித்த அவர் 141 ரன்கள் குவித்து அவுட்டாக அடுத்தடுத்து மீதமுள்ள விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் சரிந்தன. இரண்டாவது இன்னிங்ஸ்சில் மித வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி தனி ராஜ்ஜியம் நிகழ்த்தினார்.

271 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸ் சேஸிங்கின் போது மோசமான தொடக்கம் அமைந்தது மட்டுமல்ல, முக்கிய பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். ஆனால் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான சச்சின், இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிக்கான போராட்டத்தை தனக்கு ஏற்பட்ட முதுகுவலியையும் பொருப்படுத்தாமல் வெளிப்படுத்தினார்.

அவருக்கு விக்கெட் கீப்பர் நயன் மோங்கிய பக்க பலம் அளிக்க, டார்கெட்டை நோக்கி இந்தியா ஸ்கோர் சென்றது. அணியின் ஸ்கோர் 254 ரன்கள் இருந்தபோது, ஸ்பின்னர் சாக்லைன் முஸ்தாக் பந்தில் கிரீஸை விட்டு இறங்கி வந்து பவுண்டரி அடிக்க முயற்சித்த சச்சின், கேப்டன் வாசிம் அக்ரம் வசம் பிடிபட்டார்.

அவ்வளவுதான் இந்தியாவின் வெற்றி டெயில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பில் சென்றது. சச்சின் அவுட்டுக்கு பிறகு 16 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், வெறும் 4 ரன்கள் மட்டுமே இந்திய டெயிலண்டர்களால் எடுக்க முடிந்ததோடு, 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். வெற்றிக்கு அருகில் சென்று 12 ரன்களில் தோல்வியை தழுவியது இந்தியா. இதனால் பாகிஸ்தான் வரலாறு படைத்தது. 12 ஆண்டுகளுக்கு பின் 12 ரன் வித்தியாசத்தில் இந்திய மண்ணில் வெற்றியை ருசித்தது. நிதானத்தில் தொடங்கி அதிரடியில் முடிந்த சச்சின், தனது இன்னிங்ஸில் 273 பந்துகளை எதிர்கொண்டு 136 ரன்கள் அடித்தார்.

கங்குலி அவுட் சர்ச்சை

இந்தப் போட்டியில் கங்குலி அவுட்டானது சர்ச்சைக்குள்ளானது. டிஆர்எஸ் வசதி அப்போது இருந்திருந்தால் டைம் மிஷனில் சென்று இந்தியா இந்த போட்டியை எளிதில் வென்று இருந்திருக்கிலாம். அப்படியொரு அபட்டமான முடிவு கங்குலி அவுட்டாகும்போது வழங்கப்பட்டது.

சர்ச்சைக்குள்ளான கங்குலிி விக்கெட்
சர்ச்சைக்குள்ளான கங்குலிி விக்கெட்

அவர் அடித்த பந்து ஷாட் பாயிண்ட் பீல்டரின் காலில் பட்டு பின் தரையில் பட்டு எழும்ப அதை பாய்ந்து பிடித்த மொயின் கான் அவுட் அப்பீல் கேட்க, கள நடுவர்கள் நீண்ட விவாதத்துக்கு பிறகு அவுட் கொடுத்தனர். அந்த ஆட்டத்தை நேரலையில் கண்டவர்களும் சரி, ஹைலாட்டாக பார்ப்பவர்களும் சரி இப்படி மோசமான முடிவு இந்தியாவை வலுக்கட்டாயமாக தோல்வி அடைய செய்ய வைத்திருப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil