IND vs AUS in Perth: ஆஸ்திரேலியா 17 தொடர் வெற்றிக்கு டாட் வைத்த கும்ப்ளே அண்ட் கோ!பெர்தில் அற்புதம் நிகழ்த்திய இந்தியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus In Perth: ஆஸ்திரேலியா 17 தொடர் வெற்றிக்கு டாட் வைத்த கும்ப்ளே அண்ட் கோ!பெர்தில் அற்புதம் நிகழ்த்திய இந்தியா

IND vs AUS in Perth: ஆஸ்திரேலியா 17 தொடர் வெற்றிக்கு டாட் வைத்த கும்ப்ளே அண்ட் கோ!பெர்தில் அற்புதம் நிகழ்த்திய இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2024 05:30 AM IST

ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா பெற்ற வெற்றிகள் ஒவ்வொன்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்தவையாகவே இருந்து வருகின்றன. வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியாக திகழும் பெர்தில் மைதானத்தில் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டு இந்தியா பெற்ற வெற்றி ஸ்பெஷலானது தான்.

பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்ற சாதனை புரிந்த இந்தியா
பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்ற சாதனை புரிந்த இந்தியா

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் இந்தியா பெற்ற வெற்றி வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரி என்று அழைக்கப்படும் பெர்தில் நிகழந்தது என்பது ஸ்பெஷனான விஷயமாக கருதப்படுகிறது.

அத்துடன் இந்த தொடரில் சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அம்பயர்களின் தவறான முடிவுகளால் இந்தியாவிடமிருந்து வெற்றி பறிக்கப்பட்டது என்றே கூறலாம். அந்த அளவில் தவறாக அவுட் கொடுக்கப்பட்டதுடன், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு கிளீன் அவுட்டும் தரப்படவில்லை.

இந்த போட்டியில் தான், ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை, இந்திய ஸ்பின்னர் குரங்கு என திட்டியதாக இனவெறி சர்ச்சை வெடித்தது. 

நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மிரட்டலான ஆட்டத்தால் அதிர்ந்து போன ஆஸ்திரேலியா ஏற்கனவே 2 வெற்றி பெற்ற நிலையில், ஆட்டத்தை டிரா நோக்கி ஆடும் விதமாக பம்மியவாறு விளையாடினார்.

பெர்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியை பொறுத்தவரை எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்து இல்லாமல் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதோடு அவர்களை வீழ்த்தி வெற்றி வாகையும் சூடியது.

அத்துடன் இந்த போட்டியில் பல சாதனைகளும் இந்தியா நிகழ்த்தியது. அதன்படி டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 17 வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியாவின் வெற்றி பயணத்துக்கு இந்தியாவின் வெற்றி முட்டுக்கட்டையாக அமைந்தது.

இந்திய அணி பேட்ஸ்மேன்களில் யாரும் சதமடிக்காதபோதிலும், பவுலர்களில் யாரும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தாத போதிலும் இந்த வெற்றியானது கிடைத்தது. அனில் கும்ப்ளேவின் 600வது விக்கெட் இந்த போட்டியில் தான் அமைந்தது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு பெர்த் மைதானத்தில் வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அணி என இந்தியாவுக்கு பெருமையும் கிடைத்தது.

இந்தியாவின் ஆல்ரவுண்டராக ஜொலித்த இர்பான் பதான் பேட்டிங்கில் 46, 28 மற்றும் பவுலிங்கில் மொத்தம் இரண்டு இன்னிங்ஸும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனானார். இந்திய அணி பெற்ற டெஸ்ட் வெற்றிகளில் மிகவும் அபாரமான வெற்றியாக இந்த போட்டி அமைந்தது.

ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா பெற்ற வெற்றிகளிலும் மிகவும் ஸ்பெஷலானதாக இது இருப்பதற்கு அணியின் ஒட்டு மொத்த வீரர்களின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது தான்.

பெர்த் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 330 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இந்திய பேட்ஸ்மேன்களில் ராகுல் டிராவிட் 93, சச்சின் டென்டுலகர் 71 ரன்கள் அடிதிருந்தனர். வீரேந்தர் சேவாக், இர்பான் பதான், விவிஎஸ் லக்‌ஷமன் ஆகியோரும் சிறிய பங்களிப்பை பேட்டிங்கில் அளித்தனர்.

இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆல்வுட்டானது. இந்திய பவுலர்களில் ஆர்பி சிங் 4, இர்பான் பதான்ஸ, இஷாந்த் ஷர்மா, அனில் கும்ப்ளே ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

118 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா, 294 ரன்கள் எடுத்தது. விவிஎஸ் லக்‌ஷமன் 79, இர்பான் பதான் 46, வீரேந்தர் சேவாக் 43, தோனி 38, ஆர்பி சிங் 30 ரன்கள் அடித்தனர்.

413 ரன்கள் இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலியா 340 ரன்களில் காலியானது. இந்திய பவுலர்களில் இர்பான் பதான் 3, ஆர்பி சிங், அனில் கும்ப்ளே, வீரேந்தர் சேவாக் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் எடுத்தார். இந்த போட்டியில் பவுலிங் செய்த இந்திய பவுலர்கள் அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.