தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  On This Day Famous Test Match Completed By India Beating Australia And Clinches Series In In Gabba

IND vs AUS in Gabba: ஆஸ்திரேலியர்கள் தூக்கத்தை கெடுத்த பண்ட்! 32 ஆண்டு சாதனை காலி - பிரிஸ்பேனில் வரலாறு படைத்த இந்தியா

Jan 19, 2024 06:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 19, 2024 06:00 AM , IST

  • கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2014 -15ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் தொடர்களில் இந்தியாவே வென்றுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் 2020-21இல் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு இடையே சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. இந்த போட்டியை வென்றால் தொடரை வெல்லலாம் என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றது. ரிசப் பண்ட் பேட்டிங்கும், அவரது அபார பினிஷிங்கும் இந்த போட்டியை சிறந்த டெஸ்ட் போட்டியாக மாற்றின

(1 / 8)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் 2020-21இல் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு இடையே சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. இந்த போட்டியை வென்றால் தொடரை வெல்லலாம் என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றது. ரிசப் பண்ட் பேட்டிங்கும், அவரது அபார பினிஷிங்கும் இந்த போட்டியை சிறந்த டெஸ்ட் போட்டியாக மாற்றின(bcci)

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருக்க 1-1 என்ற கணக்கில் பிரிஸ்பேன் போட்டி நடைபெற்றது. இதில் முதலில்  பேட் செய்த ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்களில் ஆல்அவுட்டான ஆஸ்திரேலியா 328 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. கடினமாக இந்த இலக்கை ஒரே நாளில் இந்தியா சேஸ் செய்து வெற்றி வாகை சூடியது. இந்த சிறப்பு மிக்க சம்பவம் ஜனவரி 19ஆம் தேதியான இதே நாளில்தான் நடந்தது

(2 / 8)

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருக்க 1-1 என்ற கணக்கில் பிரிஸ்பேன் போட்டி நடைபெற்றது. இதில் முதலில்  பேட் செய்த ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்களில் ஆல்அவுட்டான ஆஸ்திரேலியா 328 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. கடினமாக இந்த இலக்கை ஒரே நாளில் இந்தியா சேஸ் செய்து வெற்றி வாகை சூடியது. இந்த சிறப்பு மிக்க சம்பவம் ஜனவரி 19ஆம் தேதியான இதே நாளில்தான் நடந்தது(bcci)

இந்திய பேட்ஸ்மேன்களில் இளம் வீரரான சுப்மன் கில் 91 ரன்கள் அடிக்க, நங்கூர ஆட்டத்தை வெளிப்படடுத்திய புஜாரா  211 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.  கடைசி செஷனில் கொஞ்சம் விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்ட ரிஷப் பண்ட் ஒற்றை ஆளாக இந்தியாவை கரை சேர்த்தார். அவர் 138  பந்துகளில் 89  ரன்கள் அடித்து நாட் அவுட்  பேட்ஸ்மேனாக இருந்தார்

(3 / 8)

இந்திய பேட்ஸ்மேன்களில் இளம் வீரரான சுப்மன் கில் 91 ரன்கள் அடிக்க, நங்கூர ஆட்டத்தை வெளிப்படடுத்திய புஜாரா  211 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.  கடைசி செஷனில் கொஞ்சம் விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்ட ரிஷப் பண்ட் ஒற்றை ஆளாக இந்தியாவை கரை சேர்த்தார். அவர் 138  பந்துகளில் 89  ரன்கள் அடித்து நாட் அவுட்  பேட்ஸ்மேனாக இருந்தார்

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில்,  முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா படுதோல்வியை சந்தித்து

(4 / 8)

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில்,  முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா படுதோல்வியை சந்தித்து(cricket australia )

எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய நிலையில்,  அஜிங்கியா ரஹானே கேப்டனாக செயல்பட்டார்

(5 / 8)

எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய நிலையில்,  அஜிங்கியா ரஹானே கேப்டனாக செயல்பட்டார்(cricket australia )

இரண்டாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே ஆட்டமாக மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்ட இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

(6 / 8)

இரண்டாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே ஆட்டமாக மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்ட இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது(cricket australia )

மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. தோல்விக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவை தோற்கடிக்க முழு தீவிரத்தை காட்டியபோதிலும் அஸ்வின் - ஹனுமா விகாரி ஆகியோரின் நங்கூர ஆட்டத்தால் தோல்வியிலிருந்து தப்பித்து டிரா செய்தது

(7 / 8)

மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. தோல்விக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவை தோற்கடிக்க முழு தீவிரத்தை காட்டியபோதிலும் அஸ்வின் - ஹனுமா விகாரி ஆகியோரின் நங்கூர ஆட்டத்தால் தோல்வியிலிருந்து தப்பித்து டிரா செய்தது(bcci)

2018-19 தொடருக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா 2-1 என்ற கணக்கில் 2020-21இல் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த தொடருக்கு பின் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை

(8 / 8)

2018-19 தொடருக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா 2-1 என்ற கணக்கில் 2020-21இல் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த தொடருக்கு பின் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை(bcci)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்