Big Bash 2023: கிளவுஸ், பேட் இல்லாமல் தில்லாக பேட் செய்ய வந்த பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப்! ரசிகர்கள் திகைப்பு
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் கையில் கிளவுஸ், காலில் பேட் இல்லாமல் பேட் செய்ய வந்தது எதிரணி வீரர்களை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் திகைப்புக்கு உள்ளாக்கியது.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் போல் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடராக பிக் பேஷ் லீக் டி20 தொடர் இருந்து வருகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 24ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து பிக் பேஷ் 2023 தொடரின் 12வது போட்டி மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையே அல்பரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிட்ன் தண்டர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, முதலில் பேட் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்த போட்டியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய மெல்போர்ன் அணியில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் கையில் கிளவுஸ், காலில் பேட் அணியாமல் களத்தினும் புகுந்தார்.
நான் ஸ்டிரைக்கர் பக்கம் நிற்க வேண்டிய காரணத்தால் அவர் இப்படி செய்தாலும், விதிமுறைக்கு எதிரானதாகவே இருந்தது. முதலில் ஹெல்மெட் கூட இல்லாமல் உள்ளே புகுந்த அவர், பிறகு என்ன நினைத்தாரே திரும்ப சென்று ஹெல்மெட் மட்டும் அணிந்து கொண்டு வந்துள்ளார்.
ஒரு வேளை அந்த கடைசி பந்து நோபாலாக அமைந்து ராஃப் ஸ்டிரைக் பக்கம் போயிருந்தால் ஆட்டம் சுவாரஸ்யமாகியிருக்கும். ஏனென்றால் அவர் பேட் இல்லாமல் பேட் செய்கிறாரா அல்லது பேட் அணிவதற்கு உதவி கேட்கிறாரா என்ற நிகழ்வு நடந்திருக்ககூடும்.
சமீபத்தில் நடந்து முடிந்து உலகக் கோப்பை 2023 தொடரில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பட்ட நேரத்தில் பேட் செய்ய வரவில்லை என டைம் அவுட் முறையில் அவுட் கொடுக்கப்பட்டார் இலங்கை ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ்.
இதைத்தொடர்ந்து ஹரிஸ் ராஃப் பிக் பேஷ் போட்டியில் வெளிப்படுத்திய நடவடிக்கையால் அதுபோன்றதொரு சம்பவம் கூட நிகழ்ந்திருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும் ஹரிஸ் ராஃப் வெளிப்படுத்திய செயல் எதிரணி, கள நடுவர்கள், ரசிகர்கள் என அனைவரையும் திகைப்புக்கு உள்ளாக்கியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. இந்த தொடரிலிருந்து ஹரிஸ் ராஃப் விலகினார். அவரது விலகலை பாகிஸ்தான் தலைமை தேர்வாளர் வாஹப் ரியாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய ஒப்பந்த வீரராக இருக்கும் ஹரிஸ் ராஃப் அணியில் சேர வேண்டும் என ரியாஸ் முயற்சி மேற்கொண்ட போதிலும் அது தோல்வியில் முடிந்தது.
இந்த விவகாரத்தில் ஹரிஸ் ராஃப் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டபோதிலும் அவர் பிக் பேஷ் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்துக்கு எதிராக அவர்களது மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதை கருத்தில் கொண்டே அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்