HT Cricket Special: இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவை தகர்த்த நியூசிலாந்து வீரர்! எதிரணியை தெறிக்கவிட்ட ஆல்ரவுண்டர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Special: இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவை தகர்த்த நியூசிலாந்து வீரர்! எதிரணியை தெறிக்கவிட்ட ஆல்ரவுண்டர்

HT Cricket Special: இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவை தகர்த்த நியூசிலாந்து வீரர்! எதிரணியை தெறிக்கவிட்ட ஆல்ரவுண்டர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 13, 2024 07:00 AM IST

ந்தியாவின் ஐசிசி கோப்பை கனவை தகர்த்த நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ன்ஸ். பேட்டிங்கில் தனது அதிரடியாலும், பவுலிங்கில் தனது வேகமாறுபாட்டாலும் திரணியை தெறிக்கவிட்ட ஆல்ரவுண்டர் ஆக ஜொலித்தார்.

இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவை தகர்த்த நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ன்ஸ்
இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவை தகர்த்த நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ன்ஸ்

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்த இவர், கத்துக்குட்டி அணியாக இருந்த நியூசிலாந்தை டாப் அணிகள் பயப்படும் விதமாக கட்டமைத்த வீரர்களில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவராக கெய்ன்ஸ் இருந்துள்ளார்.

நியூசிலாந்தின் முதல் ஐசிசி கோப்பை

நியூசிலாந்து அணி 2000ஆவது ஆண்டில் முதல் முறையாக ஐசிசி நாக்அவுட் தொடர் என்று அழைக்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்ற அணியில் முக்கிய வீரராக இடம்பிடித்திருந்தார். இந்த போட்டியில் சதமடித்து மேட்ச் வின்னராக அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்த மூன்று வீரர்களில் ஒருவராக கெய்ன்ஸ் இருப்பதுடன், சதத்தால் அணிக்கு வெற்றியை தேடி தந்தவர் என்ற மற்றொரு பெருமையும் இவர் வசம் உள்ளது.

இந்தியாவின் கோப்பை கனவை தகர்த்த கெய்ன்ஸ்

ஐசிசி நாக்அவுட் கோப்பை இறுதிப்போட்டி கென்யாவில் உள்ள நைரோபியில் நடைபெற்றது. இதில் இந்தியா நிர்ணயித்த 265 ரன்கள் இலக்கை சேஸ் செய்து நியூசிலாந்து சாம்பியன் ஆனது. இந்த போட்டியில் பேட்டிங்கில் நிலைத்து தனது அதிரடியான பேட்டிங்கால் சதமடித்த கெய்ன்ஸ், 102 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். நியூசிலாந்து முதல் முறையாக ஐசிசி கோப்பை வென்ற இந்த போட்டியில் ஆட்டநாயகன் கெய்ன்ஸ்தான்.

1990 காலகட்டத்தில் அதிரடியாக சிக்ஸர் அடிக்ககூடிய பேட்ஸ்மேனாக திகழ்ந்த கெய்ன்ஸ், நியூசிலாந்துக்காக பல்வேறு அதிரடியான இன்னிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார்.

தெறிக்கவிடும் பவுலிங்

பேட்டிங் மட்டுமில்லாமல் பவுலிங்கிலும், பீல்டிங்கிலும் தெறிக்கவிடக்கூடியவராக கெய்ன்ஸ் திகழ்ந்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் யார்க்கர், ஸ்லோ பந்து வீச்சு ஸ்பெஷலிஸ்டாக இருந்துள்ளார். டெஸ்ட், ஒரு நாள் என இரு வகை போட்டிகளிலும் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பவுலராக இருந்துள்ளார்.

சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுக்கு முன்னோடியாக இருந்த வீரராக கிறிஸ் கெய்ன்ஸை கூறலாம். வாட்சன் ஆஸ்திரேலியாவுக்கு அளித்த பங்களிப்பை, அவருக்கு முன்னரே நியூசிலாந்துக்கு வழங்கியவர் தான் கெய்ன்ஸ்

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னர் இந்தியாவில் ஐசிஎஸ் டி20 கிரிக்கெட் லீக் இரண்டு சீசன்கள் வரை நடைபெற்றது. இதில் சண்டிகர் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த கெய்ன்ஸ், போட்டி முடிவை மாற்றுவதில் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சக நியூசிலாந்து வீரர்கள் லவ் வின்சென்ட், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரும் கெய்ன்ஸுக்கு எதிராக குற்றச்சாட்டை முன் வைத்தனர். ஆனால் இதை கெய்ன்ஸ் மறுத்ததோடு, மேட்ச் பிக்ஸிங் விவகாரம் அவர் மீது நிருபனம் ஆகவில்லை.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

சிறந்த வீரராக ஜொலித்து தனது அணியின் வெற்றிக்கு தொடர்ந்து பங்களிப்பு அளித்து வந்த கிறிஸ் கெய்ன்ஸ்க்கு காயம் பெரிய எதிரியாக இருந்தது. 2004ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்ற அவர், 2006இல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை பெற்றார்.

உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன்களின் நியூசிலாந்தின் உற்பத்தியாகவும், எதிரணிக்கும் சிம்ம சொப்பனமாகவும் இருந்து வந்த கிறிஸ் கெய்ன்ஸ் பிறந்தநாள் இன்று.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.