NZ vs SA 2nd Test Day 2: ஒரே நாளில் முடிவுக்கு வந்த நியூசி., போராட்டம்-SA தரமான பந்துவீச்சு
தென்னாப்பிரிக்கா அணி 97.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களை சேர்த்தது.
செடான் பார்க்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாளில் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 242 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து, 211 ரன்களில் ஆல்-அவுட்டானது. நியூசிலாந்து அணி 144 ஓவர்களை எதிர்கொண்டது. இதையடுத்து, 31 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை நாளை தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க கேப்டன் நீல் பிராண்ட் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அந்த அணி 97.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களை சேர்த்தது.
அதிகபட்சமாக ஸ்வார்ட் அரை சதம் விளாசி அசத்தினார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளையும் ரச்சின் ரவீந்திர 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ரச்சின் தனது முதல் 13 ஓவர்களை 6 மெய்டன்கள் உட்பட 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாக பந்து வீசினார். அவர் 20 ஓவர்களில் 3-33 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து தரப்பில் டாம் லாதம் 40 ரன்களையும், கேன் வில்லியம்சன் 43 ரன்களையும் விளாசினார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரச்சின் 29 ரன்களில் நடையைக் கட்டினார். டேன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும் டேன் பேடர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நாளை தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடும்.
இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது, மேலும் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்த இந்த போட்டியை டிரா செய்ய வேண்டும். கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ரவீந்திர வீராங்கனை இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
முன்னதாக, 6 அறிமுக வீரர்களைக் கொண்ட முதல் டெஸ்டில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி இரண்டு மாற்றங்களைச் செய்தது.
லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஷான் வான் பெர்க் தனது 37 வயதில் அறிமுகமானார், அதே நேரத்தில் ஆஃப் ஸ்பின்னர் டேன் பீட் தனது 10 வது டெஸ்டுக்கு தொடக்க வீரர் எட்வர்ட் மூர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஆலிவர் ஆகியோருக்கு பதிலாக திரும்ப அழைக்கப்பட்டார்.
நியூசிலாந்தைப் பொறுத்தவரை, முதல் டெஸ்டைத் தொடர்ந்து முதுகுவலியால் அவதிப்பட்ட கைல் ஜேமிசனுக்கு பதிலாக 22 வயதான ஓ'ரூர்கே சேர்க்கப்பட்டார்.
சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னருக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் திரும்ப அழைக்கப்பட்டார், அதே நேரத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்ட பேட்ஸ்மேன் டேரில் மிட்செலுக்கு பதிலாக வில் யங் சேர்க்கப்பட்டார்.
டாபிக்ஸ்