Saurabh Netravalkar: வச்ச குறி தப்பல! கோலியை கோல்டன் டக்அவுட் ஆக்கியது எப்படி? கிடைத்த பாராட்டு - நேத்ராவல்கர் ஷேரிங்ஸ்
கோலியை கோல்டன் டக்அவுட் ஆக்கியது எப்படி என்பது குறித்த தெரிவித்துள்ள யுஎஸ்ஏ பவுலரான நேத்ராவல்கர், போட்டிக்கு பின் அவரிடம் கிடைத்த பாராட்டு குறித்தும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் குரூப் ஏ பிரிவில் யுஎஸ்ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் சூப்பர் 8 சுற்றுக்குள்ளும் நுழைந்தது.
குரூப் ஏ பிரிவில் சூப்பர் 8 சுற்றில் நுழைய இருக்கும் இரண்டாவது அணிக்கு யுஎஸ்ஏ, பாகிஸ்தான் அணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலையில் யுஎஸ்ஏ புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக யுஎஸ்ஏ வெற்றி
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி சமனின் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரில் யுஎஸ்ஏ வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்தது. யுஎஸ்ஏ வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான செளரப் நேத்ராவல்கர் திகழ்ந்தார்.
அமெரிக்காவில் இருக்கும் ஓராக்கிள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்து வரும் இவர், இந்தியாவை சேர்ந்தவர். 2010இல் இந்தியாவுக்காக யு19 உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.
நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் கவனிக்கதக்க வீரராக உருவெடுத்திருக்கும் இவர், இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பவுலிங்கில் திருப்புமுனை தந்தார்.
இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலியை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆக்கியதுடன், ரோகித் ஷர்மாவையும் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் அனுப்பினார்.
கோலி விக்கெட்டை வீழ்த்திய திட்டம்
இதையடுத்து இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகளை தூக்கியது குறித்து நேத்ராவல்கர் கூறியதாவது," எனது வாழ்க்கையில் நான் பற்று வைத்திருக்கும் இரண்டு ஆர்வமான விஷயங்களிலும் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எல்லாம் மிக வேகமாக நடக்கிறது, நான் அதை ஜீரணிக்கும் பணியில் இருக்கிறேன்.
கடைசி இரண்டு ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாக இருந்தன. விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது உணர்ச்சிகரமான தருணம். நான் ஆஃப்-ஸ்டம்பை குறிவைத்தேன். அது நன்றாக ஒர்க்அவுட்டானது.
கோலியிடம் பாராட்டு
சூர்யாவை எனக்கு 15 வயதுக்குட்பட்ட, 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் விளையாடிய நாட்களில் இருந்தே தெரியும். எனக்கு விராட்டை தனிப்பட்ட முறையில் தெரியாது, ஆனால் அவர் என்னை வாழ்த்தினார்."
இவ்வாறு அவர் கூறினார்
இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளையும் சேர்த்து கோலி இன்னும் ஒரு முறை கூட இரட்டை இலக்கை ரன்கள் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கோலி மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் 8 சுற்றை எட்டிபிடிக்கும் அரிய வாய்ப்பு
யுஎஸ்ஏ அணி தனது அடுத்த போட்டியில் அயர்லாந்து அணியை புளோரிடாவில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலே யுஎஸ்ஏ சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இவ்வாறு நடந்தால் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிடும். எனவே இந்த போட்டி மீது மிகுந்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்