Nathan Lyon records: டெஸ்டில் நாதன் லயன் 500வது விக்கெட்-பாக்., அணியை வீழ்த்தி ஆஸி., அபார வெற்றி
முரளிதரன், வார்னே, அனில் கும்ப்ளேவைத் தொடர்ந்து நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை அள்ளிய 4வது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். அதேநேரம், ஆஸி., வீரர்கள் இந்தச் சாதனையை செய்த 3வது வீரர் ஆவார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. ஆஸி., மாயாஜால பவுலர் நாதன் லயன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 வது விக்கெட்டை அள்ளி சாதனை படைத்தார்.
முரளிதரன், வார்னே, அனில் கும்ப்ளேவைத் தொடர்ந்து நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை அள்ளிய 4வது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். அதேநேரம், ஆஸி., வீரர்கள் இந்தச் சாதனையை செய்த 3வது வீரர் ஆவார்.
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ரன்களை குவித்தது.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 271 ரன்களில் சுருண்டது. இமாம்-உல்-ஹக் மட்டுமே அரை சதம் விளாசினார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆஸி., விளையாடியது. 5 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்திருந்தபோது அந்த அணி டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 90 ரன்கள் விளாசினார்.
முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அதிரடி காண்பித்த வார்னர், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டானார். இதையடுத்து, 450 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடியது. ஆனால், ஆஸ்திரேலியாவின் அபாரமான பந்துவீச்சு காரணமாக அந்த அணி வெறும் 89 ரன்களில் 4வது நாளில் சுருண்டது. இன்னும் ஒரு நாள் எஞ்சியிருந்த நிலையில், அந்த அணி ஆட்டமிழந்தது.
மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும் பாட் கம்மின்ஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இவ்வாறாக ஆஸி., சொந்த மண்ணில் 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்