MI vs DC Innings Break: ஒரே ஓவரில் 32 ரன்கள்..! யாருப்பா இந்த ஷெப்பர்டு? டெல்லிக்கு இமாலய இலக்கு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Mi Vs Dc Innings Break: ஒரே ஓவரில் 32 ரன்கள்..! யாருப்பா இந்த ஷெப்பர்டு? டெல்லிக்கு இமாலய இலக்கு

MI vs DC Innings Break: ஒரே ஓவரில் 32 ரன்கள்..! யாருப்பா இந்த ஷெப்பர்டு? டெல்லிக்கு இமாலய இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 07, 2024 05:41 PM IST

கடைசி ஓவரில் மட்டும் ஷெப்பார்டு அடித்த அடியால் மும்பை இந்தியன்ஸ் கூடுதலாக 32 ரன்கள் கிடைத்தது. டெல்லி ஸ்டிரைக் பவுலராக இருந்து வரும் நார்ட்ஜே 65 ரன்களை வாரி வழங்கினார்.

பந்தை கட் ஷாட் ஆடும் ஹர்திக் பாண்ட்யா
பந்தை கட் ஷாட் ஆடும் ஹர்திக் பாண்ட்யா (AFP)

காயத்தில் இருந்து குணமாகி முழு பிட்னஸ் பெற்ற சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். ரோமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி அணியில் ஜே ரிச்சர்ட்சன், லலித் யாதவ், குமார் குஷ்ரங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 234 அடித்துள்ளது.

அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 49, டிம் டேவிட் 45, இஷான் கிஷன் 42, ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் அடித்தனர். அதிரடி ருத்ரதாண்டவம் ஆடிய ரோமாரியோ ஷெப்பர்டு 10 பந்துகளில் 39 ரன்கள் அடித்து மிரட்டினார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி என இவர் 32 ரன்களை விளாசி தள்ளினார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார்.

டெல்லி பவுலர்களில் அக்‌ஷர் படேல், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். கலீல் அகமது ஒரு விக்கெட்டை எடுத்தார்.

ரோகித் - இஷான் கிஷன் பார்ட்னர்ஷிப்

மும்பை அணியின் ஓபனர்களான ரோகித் ஷர்மா - இஷான் கிஷன் ஆகியோர் இணைந்து நல்ல தொடக்கத்தை தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர்.

ரோகித் 27 பந்துகளில் 49, இஷான் கிஷன் 23 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அவுட்டானார்கள். இவர்களை தொடர்ந்து, பெரிய எதிர்பார்ப்புடன் பேட் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி ஏமாற்றினார். பின்னர் பேட் செய்ய வந்த திலக் வர்மாவும் 6 ரன்னில் வெளியேறினார்.

பாண்ட்யா நிதானம்

அடுத்தடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், நிதானத்தை கடைப்பிடித்து கேப்டன் பாண்ட்யா ரன் குவிப்பில் ஈடுபட்டார். 33 பந்துகளில் 39 ரன்கள் அடித்த பாண்ட்யா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தரமான பினிஷ்

பாண்ட்யாவுடன் பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டு வந்த டிம் டேவிட், அவர் அவுட்டான பிறகு அதிரடி மோடுக்கு மாறி விரைவாக ரன் குவிக்க தொடங்கினார். ஆட்டத்தின் கடைசி ஓவரை எதிர்கொண்ட ரோமரியோ ஷெப்பர்ட்டு 4 சிக்ஸர், 2 பவுண்டரி என வான வேடிக்கை நிகழ்த்தினார்.

அந்த ஓவரில் மட்டும் 32 ரன்கள் அவர் விளாசி தள்ள, அணியின் ஸ்கோர் 234 ரன்கள் என உயர்ந்தது. டிம் டேவிட் 21 பந்துகளில் 46 ரன்களும், ஷெப்பர்டு 10 பந்துகளில் 39 ரன்களும் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.