தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mi Vs Dc Result: கணக்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்! வான்கடே மைதானத்தில் 50வது வெற்றி - கடைசி இடத்தில் டெல்லி

MI vs DC Result: கணக்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்! வான்கடே மைதானத்தில் 50வது வெற்றி - கடைசி இடத்தில் டெல்லி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 07, 2024 07:35 PM IST

இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ். வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் பெறும் 50வது வெற்றி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

விக்கெட் வீழ்த்திய பும்ராவை பாராட்டிய சக மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்
விக்கெட் வீழ்த்திய பும்ராவை பாராட்டிய சக மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

காயத்தில் இருந்து குணமாகி முழு பிட்னஸ் பெற்ற சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கினார். இவர்களுடன் ரோமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

டெல்லி அணியில் ஜே ரிச்சர்ட்சன், லலித் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

மும்பை அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 234 அடித்தது. அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 49, டிம் டேவிட் 45, இஷான் கிஷன் 42, ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் அடித்தனர். அதிரடி ருத்ரதாண்டவம் ஆடிய ரோமாரியோ ஷெப்பர்டு 10 பந்துகளில் 39 ரன்கள் அடித்து மிரட்டினார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி என இவர் 32 ரன்களை விளாசி தள்ளினார்.

டெல்லி பவுலர்களில் அக்‌ஷர் படேல், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். கலீல் அகமது ஒரு விக்கெட்டை எடுத்தார்.

டெல்லி சேஸிங்

மிகப் பெரிய இலக்கை விரட்டிய டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ், இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் பெறும் 50வது வெற்றி என்ற சிறப்பையும் பெற்றது. இந்த வெற்றியால் 2 புள்ளிகளை பெற்ற மும்பை இந்தியன்ஸ் 8வது இடத்துக்கு முன்னேறியது.

டெல்லி அணியில் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71, ப்ருத்வி ஷா 66, அபிஷேக் போரல் 41 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிப்பில் ஈடுபடவில்லை.

மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் கோட்சி 4, பும்ரா 2, ரோமரியோ ஷெப்பர்டு ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point