Mohammed Shami: ரியல் லைஃப்பிலும் ஹீரோயிசம்! விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய முகமது ஷமி - வைரல் விடியோ
உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் கார் விபத்தில் சிக்கிய நபர் காப்பாற்றி உதவி புரிந்துள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி
அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக பவுலிங் செய்து இந்தியாவின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இந்த தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் முதல் இடம் பிடித்தார்.
உலகக் கோப்பை தொடருக்கு பின் தற்போது நடைபெற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் ஷமி, ரியல் லைஃப்பில் நற்செயலை செய்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.
உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் என்ற பகுதியில் நெடுஞ்சாலை அருகே இருந்த சாய்வான பள்ளத்தில் கார் ஒன்று திசை திரும்பி விபத்துக்குள்ளானது. அந்த வழியே சென்றபோது கார் விபத்துக்குள்ளாகி இருப்பதை கண்ட ஷமி, உடனடியாக சென்று காருக்குள் சிக்கியிருந்த நபரை மீட்டுள்ளார்.
இதுதொடர்பாக விடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவை பகிர்ந்துள்ள ஷமி, " இந்த நபர் மிகவும் அதிர்ஷ்டம் மிக்கவர். கடவுள் அவருக்கு இரண்டாவது வாழ்க்கையை அளித்துள்ளார். எனது காருக்கு முன் சென்ற இவரது கார் நைனிடாலில் மலைப்பகுதி சாலையை விட்டு விலகி கீழே விழுந்தது. உடனடியாக நாங்கள் அவரை காரிலிருந்து பத்திரமாக மீட்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஷமியின் இந்த துரித செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவதுடன், அவரது விடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.
உலகக் கோப்பை 2023 தொடரில் முதல் நான்கு போட்டிகள் விளையாடாத முகமது ஷமி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து தனது துல்லியமான பவுலிங்கால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த ஷமி, மூன்று போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தம் 7 போட்டிகளை விளையாடிய அவர் 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்