Mohammed Shami: இந்திய அணியின் டாப் விக்கெட் டேக்கராக மாறிய முகமது ஷமி! அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது தவிர மற்றொரு தனித்துவ சாதனை ஒன்றையும் அவர் நிகழ்த்தியுள்ளார்
உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அத்துடன் இந்த தொடரில் இதுவரை தோல்வியடையாத அணியாக இருந்து வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்றிருக்கும் வெற்றியாக இந்தியா அணிக்கு இது அமைந்துள்ளது. அதேபோல் உலகக் கோப்பை போட்டிகளிலேயே அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இலங்கை அணி இந்தப் போட்டியில் 55 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி வெறும் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழத்தினார். இந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அவர், மொத்தம் 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையெல்லாம் கடந்து மற்றொரு மிகப் பெரிய சாதனையாக உலகக் கோப்பை போட்டிகளில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற இந்திய அணியின் முன்னாள் பவுலர்கள் ஜாகீர் கான், ஜவகல் ஸ்ரீ நாத் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.
முகமது ஷமி தற்போது 45 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் நிலையில், உலகக் கோப்பை போட்டிகளில் மூன்றாவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற தனித்துவ சாதனையும் தன் வசம் வைத்துள்ளார். இன்னும் இரண்டு லீக் போட்டிகள் இந்தியா விளையாட இருக்கும் நிலையில் ஷமியின் விக்கெட் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்