தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Lsg Vs Csk Toss: வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமான செம்மண் பிட்ச்! இரு மாற்றங்களுடன் சிஎஸ்கே முதல் பேட்டிங்

LSG vs CSK Toss: வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமான செம்மண் பிட்ச்! இரு மாற்றங்களுடன் சிஎஸ்கே முதல் பேட்டிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 19, 2024 07:30 PM IST

சிஎஸ்கே அணியில் இரு மாற்றங்களும், லக்னோ அணியில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் அளிக்கும் விதமாக செம்மண் பிட்சில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது.

டாஸ் நிகழ்வில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் (இடது), லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் (வலது)
டாஸ் நிகழ்வில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் (இடது), லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் (வலது)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஷமர் ஜோசப்புக்கு பதிலாக மேட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல் ஆகியோருக்கு பதிலாக தீபக் சஹார், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லக்னோ பவுலிங் தேர்வு

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதற்கு முந்தைய போட்டிகளில் டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்து வந்த கேஎல் ராகுல், சிஎஸ்கேவுக்கு எதிராக சேஸிங்கை தேர்வு செய்திருக்கிறார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக முதல் போட்டியில் களமிறங்குகிறார் நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி. இவர் லக்னோ அணிக்கு முன்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார்.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் அந்த அணியின் 150வது வெற்றியாக அமையும்.

பிட்ச் நிலவரம்

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் செம்மண் ஆடுகளத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. கடந்த காலங்களில் இருந்ததை விட ஆடுகளம் வறண்டு காணப்படுகிறது. எனவே பெரிதாக ஸ்விங் இருக்காது. புதிய பந்தில் பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் அச்சுறுத்தல் இருக்கலாம் என பிட்ச் குறித்து ஆரோன் பிஞ்ச் கணித்துள்ளார்.

இரண்டு புற ஸ்கொயர் பவுண்டரிகளும் முறையே முறையே 61, 68மீ உள்ளது. ஸ்டெரியிட் பவுண்டரி 76மீ உள்ளது.

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குவன்டைன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான், ஆயுஷ் பதோனி, க்ருணால் பாண்ட்யா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மோக்சின் கான், யாஷ் தாக்கூர்

இம்பேக்ட் வீரர்கள்: அர்ஷின் அதுல் குல்கர்னி, கிருஷ்ணப்பா கெளதம், யுத்வீர் சிங், சித்தார்த், அர்ஷத் கான்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்கியா ரகானே, மொயின் அலி, ஷிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதிஷா பதிரனா

இம்பேக்ட் வீரர்கள்: சமிர் ரிஸ்வி, ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷித், நிஷாந்த் சிந்து, மிட்செல் சாண்ட்னர்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point