BBL 2023: பேட்ஸ்மேன்களுக்கு உயிர் பயத்தை காட்டிய பவுன்சர்! மோசமான பிட்ச் காரணமாக போட்டி ரத்து
பிக் பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் வீரர் வில் சதர்லாண்ட் ஒரே லென்தில் வீசிய பந்து மாறுபட்ட பவுன்சராக எழும்பிய நிலையில் கள நடுவர்கள் உடனடியாக ஆடுகளத்தின் தன்மையை ஆய்வு செய்து போட்டியை ரத்து செய்தனர்.
இந்தியாவில் ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 லீக்காக இருந்து வரும் பிபிஎல் என அழைக்கப்படும் பிக் பேஷ் லீக் 2023 தொடர் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதையடுத்து மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஜீலாங் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் பேட் ]செய்த பெர்த் ஸ்காட்சர்ஸ் 6.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் என இருந்தபோது, பிட்ச் ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோசமாக இருப்பதாக கூறி ரத்து செய்யப்பட்டது.
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் வீரர் வில் சதர்லாந்து ஒரே லென்தில் வீசிய பந்து மாறுபட்ட பவுன்சராக எழும்பிய நிலையில் ஆட்டத்தை நிறுத்திய களநடுவர்கள் பிட்ச் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
இரு அணியின் கேப்டன், ஆட்டத்தின் ரெப்ரி ஆகியோரையும் அழைத்து களநடுவர்கள் விவாதித்தனர். பின்னர் ஆபத்தான பிட்ச் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாளில் அங்கு மழை பெய்ததன் காரணமாக பிட்ச் தன்மை மாறியிருக்ககூடும் எனவும் மைதான பராமரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மோசமான ஆடுகளம் காரணமாக சர்வதேச அளவிலும் போட்டிகளை தடை செய்யப்பட்டிருக்கின்றன. 2007ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா - இலங்கை இடையிலான போட்டி பாதுகாப்பான பிட்ச் இல்லை என கூறப்பட்டு அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் 1998இல் வெஸ்ட்இண்டீஸ் - இங்கிலாந்து இடையே ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியும், பந்து கண்டபடி பவுன்சராகி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியதாக 11 ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மொத்த போட்டியில் ரத்தானது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்