தமிழ் செய்திகள்  /  Cricket  /  Mayank Yadav Picks 3 Wickets, Lsg Beat Rcb By 28 Runs

RCB vs LSG Result: மயங்க் யாதவ் புயலில் சிக்கிய ஆர்சிபி! மூன்றாவது தோல்வி - டாப் 4இல் நுழைந்த லக்னோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 02, 2024 11:21 PM IST

லக்னோ அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த மயங்க் யாதவ் புயல் வேக பவுலிங்கால், ஆர்சிபியின் முக்கிய விக்கெட்டுகளை காலி செய்ததுடன் அணியின் வெற்றிக்கும் உறுத

கேமரூன் க்ரீன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் லக்னோ பவுலர் மயங்க் யாதவ்
கேமரூன் க்ரீன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் லக்னோ பவுலர் மயங்க் யாதவ் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் ஆர்சிபி அணியில் அல்சாரி ஜோசப்புக்கு பதிலாக டாப்லேவும், லக்னோ அணியில் மோக்சின் கானுக்கு பதிலாக யாஸ் தாக்கூரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லக்னோ அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோ அணியில் அதிகபட்சமாக குவன்டைன் டி காக் 81 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக நிக்கோலஸ் பூரான் 40, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 24 ரன்கள் எடுத்தனர்.

ஆர்சிபி பவுலர்களில் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரீஸ் டாப்லே, யஷ் தயாள், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ஆர்சிபி சேஸிங்

மிகவும் சவாலான இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய மகிபால் லாம்ரோர் 33 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ராஜத் பட்டிதார் 29, விராட் கோலி 22 ரன்கள் எடுத்தனர்.

லக்னோ பவுலிங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மயங்க் யாதவ் வெறும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை எடுத்தார். யஷ் தாக்கூர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பவுலிங்கில் மிரட்டிய மயங்க் யாதவ்

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 155 கிமீ வேகத்தில் பந்து வீச கவனத்தை ஈர்த்த மயங்க் யாதவ், ஆர்சிபிக்கு எதிரான இந்த போட்டியிலும் புயல் வேகத்தில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை மிரட்டினார். 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராஜத் பட்டிதார், மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் ஆகியோரை அவுட்டாக்கினார்.

கடைசி இடத்தில் ஆர்சிபி

இந்த சீசனில் மூன்றாவது தோல்வியை பெறும் ஆர்சிபி அணி, உள்ளூர் மைதானத்தில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியை தழுவியுள்ளது. இந்த தோல்வியால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றுள்ளது.

டாப் 4 இடத்தில் லக்னோ

விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் வென்றிருக்கும் லக்னோ புள்ளப்பட்டியலில் டாப் 4 இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த அணி வெற்றி பெற்றிருக்கும் இரண்டு போட்டிகளிலும் நிக்கோலஸ் பூரான் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point