Asia Cup 2023 Final: ஃபைனலில் இலங்கை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் இல்லை-காரணம் என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டியின் போது அவரது வலது தொடையில் காயம் ஏற்பட்டது.
நாளை நடைபெறவுள்ள ஆசிய கோப்பை பைனல் போட்டியில் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா காயம் காரணமாக விளையாடமாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது வலது தொடையில் காயம் அடைந்த மஹிஷ் தீக்ஷனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. ஸ்கேன் செய்தபோது தசைக் காயம் உறுதி செய்யப்பட்டது. தீக்ஷனாவுக்கு பதிலாக சஹான் ஆராச்சிகேவை இலங்கை கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்த்துள்ளது.
தீக்ஷசனா உயர் செயல்திறன் மையத்திற்குத் திரும்பி உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவார். ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இந்த பதிப்பில் இலங்கையின் முன்னணி வீரர்களில் ஒருவரான தீக்ஷனா, ஐந்து போட்டிகளில் 29.12 சராசரியுடன் 3/69 என்ற சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களுடன் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பேட்டிங்கிலும் 3 இன்னிங்ஸ்களில் 32 ரன்கள் குவித்து, 28 ரன்கள் எடுத்துள்ளார்.
அணியில் சேர்க்கப்பட்ட சஹான் ஆராச்சிகே, இலங்கை அணிக்காக ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி 57 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். தீக்ஷனாவைப் போல வலது கை ஆஃப் பிரேக் பந்து வீசக்கூடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இந்தியா தனது எட்டாவது பட்டத்தையும், இலங்கை தனது ஏழாவது பட்டத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்