Nathan Lyon: 500வது டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை நோக்கி ஆஸி., பவுலர் நாதன் லயன்!-இவர் பற்றி ஸ்மித் கூறியது?
பெர்த் ஸ்டேடியம் கடந்த காலங்களில் லயனுக்கு விக்கெட்டை வேட்டையாடும் மைதானமாக இருந்தது. அவர் மூன்று டெஸ்ட்களில் 18.45 சராசரியில் 22 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
நாதன் லயன் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை, பெர்த் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் கைப்பற்றி சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
36 வயதான ஆஃப்ஸ்பின்னர் நாதன் லயன், 496 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் களத்தில் உள்ளார், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த ஒரே ஆஸ்திரேலியர்களில் ஒருவராக ஷேன் வார்ன் (708) மற்றும் கிளென் மெக்ராத் (563) ஆகியோருடன் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்த் ஸ்டேடியம் கடந்த காலங்களில் லயனுக்கு விக்கெட்டை வேட்டையாடும் மைதானமாக இருந்தது. அவர் மூன்று டெஸ்ட்களில் 18.45 சராசரியில் 22 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
"ஒரு அணியாக நாங்கள் பொதுவாக ஆஃப்ஸ்பின்னர்களின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டு விளையாடுகிறோம்," என்று பாகிஸ்தான் அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “கடந்த இரண்டு தொடர்களில் நாங்கள் நாதன் லயனுக்கு எதிராக அதிக ஸ்ட்ரைக்-ரேட்டைப் பெற்றோம். அது அப்படியே இருக்கும். லயன் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் ஒரு அணியாக நாங்கள் அவரை எதிர்கொள்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்.
மற்ற எல்லா டெஸ்ட் அணிகளையும் விட லனுக்கு எதிராக பாகிஸ்தான் அதிக ஸ்கோர் விகிதத்தைக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக லயன் ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 41.66 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் இலங்கைக்கு எதிராக சொந்த மைதானத்தில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
அவர் ஒரு “சிறந்த பந்துவீச்சாளர்” என்றார் ஹபீஸ்.
லயன் ஆஸ்திரேலியாவில் 238 விக்கெட்டுகளையும், வெளிநாட்டு மண்ணில் 238 விக்கெட்டுகளையும், நடுநிலையான இடங்களில் 20 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், “நாதன் லயன் சிறப்பான பங்களிப்பை இந்தத் தொடரில் செய்ய முடியும்” என்றார்.
500 விக்கெட்டுகளை நெருங்குவது பெரிய சாதனையாகும் என்றும் ஸ்மித் கூறினார்.
"நான் எனது பங்களிப்பை சிறப்பாக செய்ய விரும்புகிறேன்," என லியோன் கூறினார். “நான் இங்கு பந்துவீசுவதை ரசிக்கிறேன், நல்ல பவுன்ஸ் கிடைக்கும், பந்து வீச இது ஒரு நல்ல இடம். இந்த விக்கெட் வழக்கமான பெர்த் விக்கெட் போல் தெரிகிறது. இவை அனைத்தும் நல்ல அறிகுறிகள். ” என்றார் லயன்.
கேப்டனாக பாபர் அசாமுக்குப் பதிலாக ஷான் மசூத், தனது லெவன் அணியை அறிவிப்பதற்கு இறுதி ஆடுகளத்தை ஆய்வு செய்ய விரும்புவதாகக் கூறினார்.
1995க்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றிக்கு பாகிஸ்தானை வழிநடத்துவது சுற்றுப்பயணத்தின் நோக்கமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
டாபிக்ஸ்