தமிழ் செய்திகள்  /  Cricket  /  Lucknow Super Giants To Play First Home Game On Ipl 2024 Season Against Punjab Kings

LSG vs PBKS Preview: முதல் வெற்றியை பெற லக்னோவின் ஸ்கெட்ச் இதுதான்! பஞ்சாப் பிளான் என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 30, 2024 06:45 AM IST

பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரும் ஆடுகளங்களை கொண்டிருக்கும் ஏகானா மைதானத்தில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸா - பஞ்சாப் கிங்ஸ் இன்று பலப்பரிட்சை
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸா - பஞ்சாப் கிங்ஸ் இன்று பலப்பரிட்சை

ட்ரெண்டிங் செய்திகள்

லக்னோ அணி தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது. இரண்டு போட்டிகள் விளையாடியிருக்கும் பஞ்சாப், முதல் போட்டியில் வெற்றியும் இரண்டாவது போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. லக்னோ முதல் வெற்றியை நோக்கியும், பஞ்சாப் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இன்றைய போட்டியில் மோத இருக்கின்றன.

லக்னோ அணி பலம்

குவன்டைன் டி காக், கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரான், கெயில் மேயர், ஆயுஷ் பதோனி என வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக உள்ளது. எனவே முதல் பேட்டிங், சேஸிங் என எதுவாக இருந்தாலும் அணிக்கு பேட்டிங்கில் எந்த பிரச்னையும் இருக்காது.

ஆனால், பவுலிங்கில் போதிய அனுபவம் இல்லாத இளம் வீரர்களை கொண்ட அணியாக உள்ளது. மோக்சின் கான், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர் ஆகியோர் பவுலர்களாக உள்ளார்கள்.

இந்த சீசனில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் உள்ளூர் அணிகள் வெற்றி பெற்று வந்த நிலையில், அந்த முடிவு ஆர்சிபி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில் மாற்றியமைக்கப்பட்டது. எனவே உள்ளூர் அணிக்கு சாதகமான சூழல் மாறியிருப்பதால் லக்னே அணி தனது முழு திறமையும் வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி கணக்கை தொடங்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் பலம்

பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள், பவுலர்கள் என சரி விகிதத்தில் இருக்கும் அணியாக பஞ்சாப் உள்ளது. ஷிகர் தவான், லியம் லிவங்ஸ்டன், பிரப்சிம்ரன் சிங், ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார்கள். பவுலிங்கில் ககிசோ ரபாடா அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார் ஆகியோர் ஸ்டிரைக் பவுலர்களாகவும், எதிரணிக்கு பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விதமாகவும் பந்து வீசுகிறார்கள்.

முதல் இரண்டு போட்டிளில் பேட்டிங்கில் சொதப்பிய ஜானி பேர்ஸ்டோ பார்முக்கு திரும்பும் பட்சத்தில் பஞ்சாப் பேட்டிங் வரிசை மேலும் வலுபெறும்

பிட்ச் நிலவரம்

ஐபிஎல் மைதானங்களில் மிகவும் சிக்கலான பிட்ச் கொண்ட மைதானமாக லக்னோ ஏகானா மைதானம் அமைந்துள்ளது. இங்கு கருப்பு மணல், செம்மண் என இரு ஆடுகளங்களும் இருக்கின்றன. இதில் செம்மண் வேகப்பந்து வீச்சுக்கும், கருப்பு மண் ஸ்பின்னுக்கும் சாதகமாக இருக்கும்.

அத்துடன் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன்களை கொண்ட அணியாக இருந்தாலும் பெரும்பாலான போட்டிகள் லோ ஸ்கோர் ஆட்டமாகவே அமையும். அந்த வகையில் இன்றைய போட்டியில் செம்மண் ஆடுகளம் பயன்படுத்தப்படும் என கூறப்படும் நிலையில், டாப் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்துக்கு இணையாக பவுலர்களும் ஜொலிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

லக்னோ - பஞ்சாப் இதுவரை

இந்த இருஅணிகளும் 3 முறை இதுவரை மோதிக்கொண்ட நிலையில் லக்னோ 2, பஞ்சாப் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகளுக்கு இடையே கடந்த சீசனில் நடைபெற்ற மோதலில் ரன் மழை பொழியப்பட்டது. லக்னோ அணி 257 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராக இது உள்ளது.

இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிராக தனது ஆதிக்கத்தை செலுத்துவதோடு, பிட்ச் நிலவரத்தை சாதகமாக வைத்து முதல் வெற்றியை பெற லக்னோ முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதேசமயம் பஞ்சாப் அணியின் தரமான அனுபவ பந்துவீச்சாளர்களை கொண்டிருப்பதால் பிட்ச் தன்மையை தங்களுக்கு சாதமாக்கி லக்னோவை தோற்கடிக்க திட்டமிடலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point