LSG vs GT Preview: கையில் இருக்கும் முக்கிய ஆயுதம் - குஜராத்துக்கு எதிராக முதல் வெற்றியை எதிர்நோக்கும் லக்னோ
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Lsg Vs Gt Preview: கையில் இருக்கும் முக்கிய ஆயுதம் - குஜராத்துக்கு எதிராக முதல் வெற்றியை எதிர்நோக்கும் லக்னோ

LSG vs GT Preview: கையில் இருக்கும் முக்கிய ஆயுதம் - குஜராத்துக்கு எதிராக முதல் வெற்றியை எதிர்நோக்கும் லக்னோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 07, 2024 05:05 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இதுவரை வெற்றியை பெறாத அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இருந்து வருகிறது. அந்த அணிக்கு எதிராக முதல் வெற்றியை பெறும் முனைப்பில் லக்னோ இன்று களமிறங்குகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்ன்ஸ் இன்று மோதல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்ன்ஸ் இன்று மோதல்

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மயங்க் யாதவ்

லக்னோ அணியில் இந்த சீசனில் பிரமிப்பை ஏற்படுத்தும் புதிய பவுலராக மயங்க் யாதவ் உருவெடுத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 156.7கிமீ வேகத்தில் பந்து வீசி, ஐபிஎல் தொடர்களிலேயே அதி வேகமாக பந்து வீசிய பவுலராக உருவெடுத்துள்ளார்.

அத்துடன் ஆர்சிபி அணிக்கு எதிராக அற்புதமாக பவுலிங் செய்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வென்ற மயங்க் யாதவ், ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது என்ற சாதனையும் புரிந்துள்ளார். எனவே அவரது வேகம், குஜராத்துக்கு எதிரான போட்டியிலும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் முன்னேற்றம்

லக்னோ பேட்டிங்கை பொறுத்தவரை குவன்டைன் டி காக் நல்ல பார்மில் உள்ளார். அதேபோல் மார்கஸ் ஸ்டோய்னிஸும் பங்களிப்பை அளித்து வரும் நிலையில், நிக்கோலஸ் பூரான் அதிரடி காட்டி வருகிறார். இவர்கள் மூவரை நம்பி மட்டுமே லக்னோவின் பேட்டிங் வரிசை உள்ளது.

கேப்டன் கேஎல் ராகுல், ஆவேஷ் கானுக்கு பதிலாக டிரேடிங் செய்யப்பட்ட தேவ்தத் படிக்கல் இன்னும் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். அதேபோல் இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் பதோனியும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். எனவே இவர்கள் மூவரும் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் லக்னோ அணியின் பேட்டிங் வலிமை பெறும்

குஜராத் அணியின் பலம்

கடந்த போட்டியில் பிட்னஸ் காரணமாக டேவிட் மில்லர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட கேன் வில்லியம்சன் வழக்கமான தனது பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

அதன்படி சுப்மன் கில், விருத்திமான் சாஹா, சாய் சுதர்சன், கேன் வில்லியம்சன் என குஜராத் டாப் ஆர்டர் நல்ல நிலையிலேயே உள்ளது. மிடில் ஆர்டரில் பெரிதாக ஜொலிக்காமல் இருந்து வரும் விஜய் சங்கர், அஸ்மதுல்லா உமர்சாய் தங்களை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

ரஷித் கான் பார்ம்

குஜராத் டைட்டன்ஸ் ஸ்டிரைக் பவுலரும், ஸ்பின்னருமான ரஷித் கான் இந்த சீசனில் ரன்களை வாரி வழங்குவதோடு விக்கெட் வீழ்த்தவும் முடியாமல் தடுமாறி வருகிறார். மற்றொரு ஆப்கானிஸ்தான் பவுலர் நூர் அகமது சிறப்பாக செயல்பட்ட போதிலும், ரஷித் கான் பார்ம் குஜராத் அணிக்கு முக்கிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது

பிட்ச் நிலவரம்

லக்னோ பிட்ச் பொதுவாக பேட்ஸ்மேன்களை சோதிக்கும் விதமாக இருக்கும். ஆனால் கடந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்தார்கள். ஆனால் அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக பிட்சில் லேசான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பவுலர்களும் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் கை கொடுக்கும் என நம்பலாம்

லக்னோ - குஜராத் இதுவரை

2022 சீசனில் சேர்க்கப்பட்ட புதிய அணிகளாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் உள்ளது. இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட 4 போட்டிகளில், அனைத்திலும் குஜராத் வென்றுள்ளது. எனவே லக்னோ அணி, குஜராத்துக்கு எதிராக இன்று முதல் வெற்றியை பெற போராடும் என எதிர்பார்க்கலாம். இதற்கு முக்கிய ஆயுதமாக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பயன்படுத்தப்படுவார் என தெரிகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.