Virat Kohli: 2023இல் மட்டும் இத்தனை சாதனைகள் படைத்துள்ளாரா கோலி!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Virat Kohli: 2023இல் மட்டும் இத்தனை சாதனைகள் படைத்துள்ளாரா கோலி!

Virat Kohli: 2023இல் மட்டும் இத்தனை சாதனைகள் படைத்துள்ளாரா கோலி!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 01, 2024 06:09 PM IST

சச்சினுக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட்டில் சாதனை மன்னனாகவே இருந்து வருகிறார் விராட் கோலி. வழக்கம் போல் 2023ஆம் ஆண்டிலும் பல்வேறு சாதனைகளை தனக்கு பெயரில் சொந்தமாக்கியுள்ளார்.

வலைப்பயிற்சியின்போது விராட் கோலி
வலைப்பயிற்சியின்போது விராட் கோலி (PTI)

அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு விராட் கோலிக்கு சிறந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. விராட் கோலியின் நீண்ட நாள் கனவான ஐசிசி உலகக் கோப்பை இந்த ஆண்டிலும் அவர் வெல்லாமல் போனது ஏமாற்றமாக அமைந்த போதிலும், தனியொரு வீரராக ரன் வேட்டையில் பல உச்சங்களை தொட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டில் விராட் கோலி 36 இன்னிங்ஸில், 66 சராசரியுடன் மொத்தமாக 2048 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 8 சதங்கள், 10 அரை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 24 இன்னிங்ஸ் விளையாடி 1,377 ரன்களை எடுத்துள்ள கோலி, 6 சதம், 8 அரை சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 671 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார்.

2023ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கார். இதுவரை இல்லாத அளவில் ஒரு உலகக்கோப்பை தொடரில் 765 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்திருக்கிறார்.

2023ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 117 ரன்கள் அடித்ததன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம் சாதனையை கோடி முறியடித்தார். நியூசிலாந்துக்கு எதிராக கோலி அடித்த சதம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த 50வது சதமாகும். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

2023இல் 2000 ரன்களை கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்ளை 7 முறை கடந்த வீரர் என்ற உலக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் இலங்கை அணியின் குமாரா சங்கக்காரா இந்த சாதனையை 6 முறை நிகழ்த்தியிருந்தார். தற்போது கோலி அதை முறியடித்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தபோது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சச்சின் டென்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ரன் மெஷினாகவும், சாதனை மன்னனாகவும் இருந்து வரும் விராட் கோலி, 2023ஆம் ஆண்டில் எட்டிய சாதனைகளின் லிஸ்ட் இதோ

அதிக ஒரு நாள் சதம் - 50

அதிக தொடர் நாயகன் விருது - 21

வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக சதமடித்தவர் - 56

ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்கள் அடித்தது - 8

ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்கள் அடித்தது - 7

இந்தியாவின் வெற்றிக்கான பங்களிப்பில் அதிக முறை 50க்கும் அதிகமான ரன்களை அடித்தவர்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.