ICC: ஐசிசி சிறந்த ஒரு நாள் கிரிக்கெட்டர் 2023 விருதுகளில் கோலி, கில், ஷமி, மிட்செல்
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டம் மூலம் கவனத்தை ஈரத்தவர்களாக விராட் கோலி, சுப்மன் கில், முகமது ஷமி, நியூசிலாந்தின் டேரில் மிட்செல் ஆகியோர் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஐசிசியின் 2023ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
ஐசிசி 2023 ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதுக்கு மூன்று இந்திய வீரர்கள், ஒரு நியூசிலாந்து வீரர் என நான்கு பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
சுப்மன் கில்
கடந்த 2023ஆம் ஆண்டில் சுப்மன் கில் வெளிப்படுத்திய ஆட்டம், அவர் எதிர்காலத்தில் மிக பெரிய வீரராக ஜொலிப்பார் என்பதை காட்டும் விதமாக அமைந்துள்ளது. மொத்தம் 29 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய கில், 1584 ரன்கள், 24 கேட்ச்களை பிடித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 63.36ஆக உள்ளது. அத்துடன் 5 சதங்களை அடித்திருப்பதுடன், ஸ்டிரைக் ரேட் 100க்கு மேல் வைத்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை தொடரில் 354 ரன்கள், 44.25 சராசரியுடன் எடுத்துள்ளார்.
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன், ஒபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய கில், நினைவுகூரத்தக்க வகையில் பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்களில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார் கில். சச்சின் டெல்டுலகர் (1996, 1998), ராகுல் டிராவிட் (1999), செளரவ் கங்கலி (1999) ஆகியோருக்கு அடுத்தபடியாக கில் உள்ளார்.
முகமது ஷமி
பவுலிங்கில் அற்புதம் செய்த முகமது ஷமி, 19 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 36 ரன்கள், 3 கேட்ச்களை பிடித்துள்ளார். 2023ஆம் ஆண்டின் முதல் பாதி ஷமிக்கு சராசரியாக சென்றாலும், இரண்டாம் பாதி குறிப்பாக உலகக் கோப்பை தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது.
உலகக் கோப்்பை தொடரில் முதல் நான்கு போட்டிகளை விளையாடாத ஷமி, பின்னர் விளையாடி அனைத்து போட்டிகளில் விக்கெட்டுகளை அள்ளினார். மொத்தம் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் முதல் இடத்தை பிடித்த ஷமி, 10.7 சராசரியை வைத்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் மட்டும் விளையாடி 7 போட்டிகளில் மூன்று முறை 5 விக்கெட்டுகள், ஒரு முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன், உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையும் புரிந்தார். 18 போட்டிகளில் அவர் 55 விக்கெட்டுகளை எடுத்து உலகக் கோப்பை போட்டியின் நாயகனாகவே வலம் வந்துள்ளார்.
ஷமியின் சிறந்த ஆட்டமாக, உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 57 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது அமைந்துள்ளது.
விராட் கோலி
இந்தியாவின் ரன் மெஷினான விராட் கோலி, வழக்கம்போல் கடந்த ஆண்டிலும் ரன் வேட்டை நிகழ்த்த தவறவில்லை. மொத்தம் 27 போட்டிகளில் 1377 ரன்கள், 12 கேட்சகளுடன், பவுலிங்கிலும் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.
ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக இருந்த சச்சின் டென்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி. நடந்து முடிந்த உலகக் கோப்பை 2023 தொடரில் கோலி 765 ரன்களை அடித்ததோடு, மூன்று சதங்களை விளாசினார். இந்த தொடரில் அவரது சராசரி 95.62 எனவும், ஸ்டிரைக் ரேட் 90.31ஆகவும் உள்ளது.
அத்துடன் ஒரு நாள் போட்டிகளில் 50 சதங்கள் என்ற மைல்கல் சாதனையை புரிந்துள்ளார் விராட் கோலி.
டேரில் மிட்செல்
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான டேரில் மிட்செல் கடந்த ஆண்டில் 26 போட்டிகளில் விளையாடி 1204 ரன்கள், 22 கேட்ச்கள், 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக ஏப்ரலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசி கவனத்தை ஈர்த்தார். உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த மிட்செல், அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
உலகக் கோப்பை தொடரில் 552 ரன்கள் அடித்த மிட்செல், 69 சராசரியுடன், 100க்கும் மேல் ஸ்டிரைக்ரேட் எடுத்தார். அத்துடன் இந்தியாவுக்கு மட்டும் இரண்டு சதங்களை அடித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்