தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Rr Vs Rcb: ஆமை வேகத்தில் சதமடித்த கோலி! மோசமான பினிஷ் - கட்டுப்படுத்திய ராஜஸ்தான் பவுலர்கள்

RR vs RCB: ஆமை வேகத்தில் சதமடித்த கோலி! மோசமான பினிஷ் - கட்டுப்படுத்திய ராஜஸ்தான் பவுலர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 06, 2024 09:21 PM IST

கோலியின் சதம், கோலி - டூபிளெசிஸ் பார்ட்னர்ஷிப்பால் ஆர்சிபி அணி 183 ரன்கள் குவித்துள்ளது. மேக்ஸ்வெல் தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பந்தை பவுண்டரிக்கு அடித்த விராட் கோலி
பந்தை பவுண்டரிக்கு அடித்த விராட் கோலி (ANI )

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆர்சிபி அணியில் அனுாஜ் ராவத்துக்கு பதிலாக செளரப் செளகான் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. கோலி சிறப்பாக பேட் செய்து சதமடித்ததுடன் 113 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் டூ பிளெசிஸ் 44 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் ஸ்பின்னர் சஹால் 2 விக்கெட்டுகளை எடுத்தார். நந்த்ரே பர்கர் ஒரு விக்கெட் எடுத்தார். தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியில் அஸ்வின் விக்கெட் வீழ்த்தவில்லை.

கோலி சதம்

முதல் ஓவரில் இருந்து கடைசி வரை பேட் செய்த கோலி பொறுமையாக பேட் செய்ததுடன் சதமடித்தார். 67 பந்துகளில் 100 ரன்களை அடித்த கோலி தனது இன்னிங்ஸில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளை அடித்து மொத்தமாக 113 ரன் அடித்தார்.

அத்துடன் இந்த சீசனின் முதல் சதத்தையும் கோலி பூர்த்தி செய்தார். இது கோலி அடிக்கும் எட்டாவது சதமாகும்.

அத்துடன் ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அதிக பந்துகளில் சதம் அடித்தவர் லிஸ்டில் மனீஷ் பாண்டேவுடன் இணைந்துள்ளார். 

தற்போது வரை இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக இருந்து வரும் கோலி, ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

மேக்ஸ்வெல் ஏமாற்றம்

ஆர்சிபி ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பியுள்ளார். இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒரேயொரு முறை மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் அடித்துள்ளார். இரண்டு முறை டக் அவுட்டாகியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இந்த போட்டியில் மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் வெளியேறினார். 

விக்கெட் எடுக்காத அஸ்வின்

இந்த சீசனில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சிரமம் அடைந்து வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். தொடர்ந்து மூன்றாவது போட்டியாக அவர் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை.

வரும் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில் அஸ்வின் பவுலிங்கில் ஜொலிக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point