'கருப்பு பேண்ட் கட்டியது ஏன்?’ - விளக்கமளித்த ஆஸி. வீரர் கவாஜா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  'கருப்பு பேண்ட் கட்டியது ஏன்?’ - விளக்கமளித்த ஆஸி. வீரர் கவாஜா

'கருப்பு பேண்ட் கட்டியது ஏன்?’ - விளக்கமளித்த ஆஸி. வீரர் கவாஜா

Marimuthu M HT Tamil
Dec 22, 2023 10:32 AM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கவாஜா தனது கையில் கருப்புப் பேண்ட் அணிந்ததன் உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐசிசிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா
டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா (AFP)

ஆனால், ஆஸ்திரேலியாவின் பெர்த் டெஸ்ட் போட்டியின் போது கவாஜா கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்த அப்பாவி மக்களை ஆதரிக்கும் வகையில் அதை அணிந்திருந்ததாக பலரால் சந்தேகிக்கப்பட்டது. இந்தச் செயல் ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடந்தது என்ன?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா கடந்த வாரம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு, பாலஸ்தீன கொடியின் நிறத்தில் தனது ஷூவில் "சுதந்திரம் ஒரு மனித உரிமை" மற்றும் "அனைத்து உயிர்களும் சமம்" என்ற வரிகளை எழுதி வைத்து இருந்தார். விளையாட்டின்போது அதனை அணிய திட்டமிட்டு இருந்தார், கவாஜா.

இருப்பினும், அரசியல், மத அல்லது இன நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை பொதுவெளியில் வெளிப்படுத்தக்கூடாது என்ற ஐசிசி விதிமுறைகளின்கீழ் அவர் அவ்வாறு விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அன்று கவாஜா கருப்புக் கவசத்தை அணிந்திருந்தார். ஐசிசி ஆடை மற்றும் உபகரண விதிமுறைகளுக்கு எதிராக, ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா நடந்துகொண்டதைக் கண்டறிந்தது. 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது உஸ்மான் கவாஜா,  ஆஸ்திரேலியா மற்றும் ஐசிசியின் முன் அனுமதி பெறாமல், கருப்பு பேண்டைக் காட்டினார்.

 ஆனால், இது விதி மீறல் என கண்டனம் தெரிவித்தார், ஐசிசி செய்தித் தொடர்பாளர். இதற்கு தண்டனை உண்டு என்றும் கூறினார். 

ஐசிசியின் நிலைப்பாட்டினால் குழப்பம் அடைந்த கவாஜா, இது தன்னுடைய தனிப்பட்ட துக்கத்துக்கானது என்று தெளிவுபடுத்தினார். மேலும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சவால் செய்வேன் என்றும் கூறினார். 

அடுத்த வாரம், மெல்போர்னில் நடக்கும் டெஸ்ட் போட்டியின்போது, தான் கருப்புக் கச்சை அணியப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

 இதுகுறித்து இன்று கிரிக்கெட் வீரர் கவாஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெர்த் நகரில் ஐசிசி தரப்பில் என்னிடம் கேட்டார்கள். இது ஒரு தனிப்பட்ட துக்கத்திற்காக கருப்பு பேண்ட் அணிந்திருந்தேன் என்று அவர்களிடம் நான் சொன்னேன். இது வேறு எதற்கும் தான் அணியவில்லை என்று கூறினேன். ஷுக்கள் விவகாரம் வேறு. அதைச் சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய கருப்பு பேண்ட் பற்றி அவர்கள் பேசுவது எனக்குப் புரியவில்லை. எல்லா விதிமுறைகளையும், கடந்த முன்னுதாரணங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் பேட்டில் ஸ்டிக்கர் ஒட்டி விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன். 

கடந்த காலங்களில் சிலர் ஐசிசி அனுமதியின்றி, ஷுக்களில் பெயர்கள் எழுதியிருந்தபோது, ஒருபோதும் கண்டிக்கப்படவில்லை.

நான் ஐசிசி மற்றும் அவர்கள் வைத்திருக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிக்கிறேன். நான் அவர்களிடம் கேட்டு விளையாடுவேன். ஆனால்,அவர்கள் அதை அனைவருக்கும் நியாயமானதாகவும், சமமானதாகவும் ஆக்கவேண்டும். 

ஐசிசி, நிலைத்தன்மையுடன் இல்லை. நான் மிகவும் வெளிப்படையாக இருக்கிறேன். நேர்மையாக, நான் அதை ஐசிசியுடம் சொல்வேன்" எனத் தெரிவித்தார். 

இவ்விவகாரம் தொடர்பாகப் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி, இது ஒரு சிக்கலான விஷயம் என்றும், கவாஜாவை ஆதரிப்பதற்கும், ஐசிசி விதிமுறைகளுக்கு எதிராகச் செல்லாமல் இருப்பதற்கும் இடையில் ஒரு நடுநிலையைக் கண்டுபிடிக்க தான் முயற்சிக்கிறேன் என்றார்.

மேலும் அவர், "ஐசிசியில் ஒரு நல்ல காரணத்திற்காக விதிகள் உள்ளன என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். மேலும் எங்கள் வீரர்கள் அந்த விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

உஸ்மான் கவாஜா, தனது செய்தியைப் பகிர அனுமதிக்க வழி இருக்கிறதா என்று பார்ப்பதே நாங்கள் செய்து வரும் பணியாகும். அதுதான் இப்போது ஐசிசியிடம் பரிசீலனையில் உள்ளது’’ என்றார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.