Kapil Dev:இவர்தான் ரியல் கேப்டன்! புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் முன்னாள் பயிற்சியாளர் - பென்ஷனை அளிக்க தயாரான கபில்தேவ்
டிராவிட்டுக்கு முன் இந்திய அணியின் தடுப்பு சுவராகவும், இந்தியாவுக்கு பல கோப்பைகளை வென்ற கொடுத்து புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் முன்னாள் பயிற்சியாளர் அன்சுமன் கெய்க்வாட் மருத்துவ தேவைக்கு நிதி திரட்ட முன் வைந்துள்ளார் கபில்தேவ். அவருக்காக பென்ஷனையும் அளிக்க தயார் என தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமாக இருந்தவர் அன்சுமான் கெய்க்வாட். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் இவர் நிதி உதவி வேண்டி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து அவருடன் இணைந்து விளையாடியவரும், இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பை பெற்று கொடுத்த கேப்டனுமான கபில்தேவ், முன்னாள் வீரர்களான மொஹிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாடில், திலீப் வெங்சர்க்கார், மதன் லால், ரவி சாஸ்த்ரி, கிரிதி ஆசாத் உள்ளிட்டோருடன் இணைந்து அன்சுமன் கெய்வாட்க்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியமும் கெய்க்வாட்டுக்கு வேண்டிய உதவிய தரும் என நம்புவதாக தெரிவித்தார்.
வலியை உணர்கிறேன்
இதுதொடர்பாக கபில்தேவ் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "இது மிகவும் வருத்தமளிக்கிறது. நான் அன்ஷுவுடன் விளையாடியதால், நானும் அவரது வலியை உணர்கிறேன். அவரை இந்த நிலையில் பார்க்க சகிக்க முடியவில்லை. யாரும் இதுபோல் கஷ்டப்படக் கூடாது. வாரியம் அவரை கவனித்துக்கொள்ளும் என்று எனக்குத் தெரியும்
நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அன்ஷுவுக்கு எந்த உதவியும் உங்கள் இதயத்திலிருந்து வர வேண்டும்.
இந்திய அணிக்காக பேட்டிங் செய்யும்போது சில ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தனது முகம் மற்றும் மார்பில் அடிகளை அன்ஷு வாங்கினார். அவருக்காக நாம் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. கிரிக்கெட் ரசிகர்கள் அவரை ஏமாற்ற மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் குணமடைய அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்
ரத்த புற்றுநோய்
அன்சுமன் கெய்க்வாட் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை இந்திய அணியின் முன்னாள் வீரரான சந்தீப் படேல் வெளிப்படுத்தினார். கெய்க்வாட் ஒரு வருடத்துக்கும் மேலாக அதை எதிர்த்துப் போராடி வருகிறார் எனவும், அதன் சிகிச்சைக்காக லண்டனில் இருந்தார். கெய்க்வாட் தனக்கு நிதி உதவி தேவை என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
இதையடுத்து முன்னாள் வீரரான வெங்சர்க்கார், பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் ஷெலரிடம் இதுகுறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஓய்வூதியத்தை தர தயார்
"துரதிர்ஷ்டவசமாக, எங்களிடம் ஒரு அமைப்பு இல்லை. இந்த தலைமுறை வீரர்கள் நல்ல பணம் சம்பாதிப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உதவி ஊழியர்களுக்கும் நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. எங்கள் காலத்தில், வாரியத்திடம் பணம் இல்லை. இன்று நிலைமை அப்படியில்லை என்பதால், கடந்த கால மூத்த வீரர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்
ஆனால் அவர்கள் தங்கள் பங்களிப்புகளை எங்கே அனுப்புகிறார்கள்? ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டால், அவர்கள் தங்கள் பணத்தை அங்கு வைக்கலாம். ஆனால் எங்களிடம் ஒரு அமைப்பு இல்லை. அறக்கட்டளை இருக்க வேண்டும். பிசிசிஐ அதை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.
குடும்பத்தினர் அனுமதித்தால் எங்கள் ஓய்வூதியத் தொகையை நன்கொடையாக வழங்குவதன் மூலம் பங்களிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்."
வீரராக, பயிற்சியாளராக கலக்கிய கெய்க்வாட்
டிராவிட்டு முன் இந்திய அணியின் தடுப்பு சுவர் போல் விளங்கிய இந்திய பேட்ஸ்மேனான கெய்க்வாட் அணிக்கு பல வெற்றிகளில் பங்களிப்பை வழங்கியுள்ளார். 1990 பிறபகுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இவரது பயிற்சி காலத்தில் தான் புகழ் பெற்ற ஷர்ஜாவில் நடந்த கோகோ கோலா கோப்பை, வங்கதேசத்தில் நடந்த சுதந்திரதின கோப்பை, டைட்டன் கோப்பை போன்ற பல்வேறு தொடர்களில் இந்தியா வெற்றி பெற்றது.
அத்துடன் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இவர் பயிற்சியாளராக இருந்தபோதுதான்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்